அஜித்குமார்


சினிமா , குடும்ப வாழ்க்கை , பைக்கில் உலக சுற்றுலா என தனது வாழ்க்கையில் பயங்கர பிஸியாக இருந்து வருகிறார் அஜித் . விடாமுயற்சி படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப் படும் நிலையில் குட் பேட் அக்லி படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு வெளியாக இருக்கிறது.  மகிழ் திருமேணி இயக்கத்தில் நடிகர் அஜித் விடாமுயற்சி படத்தை லைகா ப்ரோடக்‌ஷன்ஸ்   தயாரித்துள்ள நிலையில் அர்ஜூன் , த்ரிஷா, ஆரவ் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்து உள்ளார். கடந்த ஆண்டு முழுவதும் அஜர்பைஜானில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. படத்தின் டைட்டில் வெளியாகிய நீண்ட காலம் கழித்தும் எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. இப்படியான நிலையில் அஜித் தனது அடுத்தப் படத்தை அறிவித்தார்.


குட் பேட் அக்லி






விடாமுயற்சி படத்தைத் தொடர்ந்து நடிகர் அஜித் குமார் குட் பேட் அக்லி படத்தில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு மார்க் ஆண்டனி படத்தின் மூலம் 100 கோடி வசூல் அடித்த ஆதிக் ரவிச்சந்திரன் இப்படத்தை இயக்க இருக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறது . தேவி ஸ்ரீ பிரசாத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். கடந்த மே 1 ஆம் தேதி அஜித் பிறந்தநாளை முன்னிட்டு அவர் விடாமுயற்சி அல்லது குட் பேட் அக்லி படத்தில் அப்டேட் வெளியாகும் என ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் படக்குழு தரப்பில் இருந்து எந்த வித தகவலும் வெளியாகாத நிலையில் அஜித் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். இப்படியான நிலையில் இப்படத்தின் அப்டேட் இன்று மாலை 6:31 மணியளவில் வெளியாகும் என அஜித் மேலாளர் சுரேஷ் சந்திரா தகவல் வெளியிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்த் தற்போது இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களை உற்சாகப் படுத்தியுள்ளது. 


படத்தின் டைட்டிலுக்கு ஏற்ற மாதிரி குட் பேட் அக்லி என மூன்று விதமான அஜித் இந்த போஸ்டரின் இடம்பெற்றுள்ளார். இப்படம் அஜித் சமீபத்திய ஆண்டுகளில் நடித்த படங்களைவிட வித்தியாசமான ஒன்றாக இருக்கும் என்று அஜித் ரசிகர்கள் நிச்சயம் எதிர்பார்க்கலாம்