ஜெயிலர்- 2 படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியாகி இருந்த நிலையில் அதில் பாதி காட்சிகளுக்கு மேல் ரஜினிகாந்த் நடிக்கவில்லை என்கிற விமர்சனங்களை நெட்டிசன்கள் எடுத்து வைத்தனர்.
ஜெயிலர் 2
நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் ஜெயிலர் 2 படத்தின் அறிவிப்பு கடந்த பொங்கல் தினத்தன்று(14.01.25) அன்று வெளியானது
நெல்சன் ரஜினி காம்போவில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது. உலகளவில் இப்படம் 600 கோடிக்கு மேல் வசூலித்தது மேலும். இதே கூட்டணியில் ஜெயிலர் 2 படத்தை எடுக்கலாம் என்று சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் முடிவு செய்தது
இதையும் படிங்க: Emergency Movie; கங்கனாவின் எமர்ஜென்சி திரைப்படம் எப்படி இருக்கு? ட்விட்டர் ரிவ்யூவ்
ஜெயிலர் 2 படத்தின் அறிவிப்பு டீசரை சன் பிக்ச்சர்ஸ் வெளியிட்டுள்ளது. நெல்சனின் ஸ்டைல் ரஜினியின் மாஸ் என இந்த டீஸர் ரசிகர்களை கவர்ந்தது.
ரஜினி டூப்?
ஆனால் இந்த டீசர் வெளியான பிறகு, இதில் வரும் பல காட்சிகளில் ரஜினி நடிக்கவில்லை என்றும் அவருக்கு டூப் போட்டு தான் டீசர் ஷூட்டிங் நடந்ததாகவும் நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வந்தனர். ஆனால் பதிலுக்கு ரஜினி ரசிகர்களும் பதிலடி கொடுத்து வந்தனர்.
வெளியான மேக்கிங் வீடியோ:
இந்த நிலையில் விமர்சனங்களுக்கு பதில் தரும் விதமாக ஜெயிலர் 2 அறிவிப்பு வீடியோவின் மேக்கிங்கை சன் பிக்சர்ஸ் நிறுவனம் இன்று வெளியிட்டது. அதில் முழு வீடியோவின் மேக்கிங்கையும் படக்குழுவானது பதிவிட்டிருந்தது. அதில் முழுக்க முழுக்க சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ளார்.
இதன் மூலம் அறிவிப்பு வீடியோவில் ரஜினிகாந்த டூப் போட்டார் என்று எழுந்த விமர்சனங்களுக்கு இது ஒரிஜினல் கண்ணா என்கிற பதிலடியை ரஜினி ரசிகர்கள் கொடுத்து வருகின்றனர்.