நடிகர் அஜித் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தன் திருமண பந்தத்தின் ரகசியங்களை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். அஜித் சில வருடங்களுக்கு முன் அளித்த பேட்டி தொடர்பான வீடியோ தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது. 


அதில் அவர் தெரிவித்துள்ளதாவது. “என் மனைவி ஷாலினி என் கஷ்டமான நேரங்களில் என் உடன் இருந்திருக்கிறார். ஷாலினியை என் மனைவியாய் பெற்றதால் நான் ஆசீர்வதிக்கப்பட்டவனாய் உணர்கிறேன். நான் என்னை நல்லவனாய் காட்டிக்கொள்ள வேண்டும் என்று இதை கூறவில்லை. ஆனால் இது தான் உண்மை. நானும் என் மனைவி ஷாலினியும் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் மரியாதை அளிப்போம். அனைத்து உறவுகளிலும் அவர்களுக்கான ஒரு ஸ்பேஸ் கொடுக்க வேண்டும். எனக்கு தேவையான ஸ்பேசை ஷாலினி கொடுக்கின்றார். அதே நேரத்தில் அவருக்கு தேவையான ஸ்பேசை நானும் கொடுக்கின்றேன். அவர் மிகவும் பக்குவமான பெண். அவருடைய வயதையும் தாண்டிய பக்குவமான பெண்.  மற்ற கணவன் மனைவியை போல் எங்களுக்குள்ளும் சண்டைகள் வரும். ஆனால் அந்த பிரச்சனைகளோடு நாங்கள் தூங்க சென்றதில்லை. நாங்கள் ஒரு நண்பர்களை போல் அதை பேசி தீர்த்துக் கொள்வோம்”.  இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 


நடிகர்கள் அஜித்-ஷாலினி தம்பதி மிகவும் பிரபலமான நட்சத்திர ஜோடி.  இவர்கள் ஏராளமானோருக்கு ஃபேவரெட் ஜோடியாகவும் உள்ளனர். தன் சினிமா உலகம், மற்றும் வெளிநாட்டு சுற்றுலா ஆகியவற்றைத்  தாண்டி ,தன் குடும்பத்துடன் அதிக நேரம் செலவிடும் அஜித் குடும்பத்தின் மீது அதிக அன்பு கொண்டவர். இந்நிலையில் தன் மனைவி ஷாலினி குறித்து நடிகர் அஜித் பேசியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது. 






அஜித் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாக உள்ள திரைப்படம் விடா முயற்சி. லைகா நிறுவனம் தயாரிக்க உள்ள இப்படத்தை மகிழ் திருமேனி இயக்க உள்ளார். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார். அஜித்தின் நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த நீரவ் ஷா தான் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய உள்ளார். இப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த மே 1-ஆம்  தேதி நடிகர் அஜித்தின் பிறந்தநாள் அன்று வெளியானது. 


மேலும் படிக்க, 


அப்படிபோடு! ஒருவழியாக தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்க சம்மதித்த கர்நாடகா! ஆனால் ஒரு ட்விஸ்ட்!


மாமன்னனை அடுத்து ரிலீஸ்க்கு தயாரான மாரி செல்வராஜின் ’வாழை’ - அடுத்த மேஜிக் பார்க்க காத்திருக்கும் உதயநிதி