தமிழ்நாட்டின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். இவரது நடிப்பில் உருவாகிய வலிமை படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படம் வரும் 24-ந் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில், படத்தின் இறுதிக்கட்ட பணிகளை நடிகர் அஜித் நேரில் சென்று பார்த்தபோது எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. படத்தின் இயக்குனர் எச்.வினோத் ஆகியோர் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. இந்த படத்தின் பின்னணியில் வலிமை திரைப்படத்தின் வலிமை என்ற பெயர் திரையில் உள்ளது. மேலும், 2 மணி நேரம் 35 நிமிடங்கள் 8 நொடிகள் என்று உள்ளது. மேலும், 2 மணி 21 நிமிடங்கள் 28 நொடிகள் என்றும் உள்ளது.  


தமிழ் திரையுலகில் கிங ஆப் ஓபனிங்காக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் விஸ்வாசம் படத்திற்கு பிறகு இயக்குனர் எச்.வினோத்துடன் பிங்க் பட ரீமேக்கான நேர்கொண்ட பார்வையில் இணைந்தார். பின்னர், இயக்குனர் எச்.வினோத்தின் கதையிலே வலிமை படம் தொடங்கப்பட்டது.




கொரோனா மற்றும் ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு தாமதமாகியது. பின்னர். மீண்டும் தொடங்கப்பட்ட வலிமை படப்பிடிப்பு விரைவாக முடிக்கப்பட்டது. சுமார் இரண்டரை ஆண்டுகள் நடைபெற்ற வலிமை படத்தின் படப்பிடிப்பு முடிக்கப்பெற்று கடந்தாண்டு வலிமை படத்தின் டீசர் வெளியானது. மாபெரும் வரவேற்பை பெற்ற வலிமை படத்தின் டீசரைத் தொடர்ந்து படம் பொங்கல் கொண்டாட்டமாக திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது.


ஆனால், ஒமிக்ரான் வைரஸ் எச்சரிக்கை காரணமாக படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. இதனால், அஜித் ரசிகர்கள் அதிர்ச்சிடையந்தனர். இந்த நிலையில், வலிமை படம் பிப்ரவரி 24-ந் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்தது. படத்தின் டிரெய்லரும் வெளியிடப்பட்டது. முற்றிலும் போலீஸ் கதையான இந்த படத்தின் டிரெய்லருக்கும் ரசிகர்கள் பிரம்மாண்ட வரவேற்பு அளித்தனர். இந்த நிலையில், வலிமை கொண்டாட்டத்திற்கு தயாராகி வரும் ரசிகர்களுக்கு தற்போது வெளியாகியுள்ள இந்த புகைப்படம் மிகுந்த உற்சாகத்தை அளித்துள்ளது.




படத்தில் அஜித்குமாருக்கு ஜோடியாக ஹியூமா குரோஷி நடித்துள்ளார். யுவன்சங்கர்ராஜா இசையமைத்துள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். விஜய் வேலுக்குட்டி எடிட்டிங் செய்துள்ளார். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரித்துள்ளார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண