அமிர் கான்
கடந்த 30 ஆண்டுகளாக பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருந்து வருபவர் அமீர்கான். பத்மபூஷன், பத்மஸ்ரீ, ஃபிலிம் ஃபேர் விருதுகள் என பல விருதுகளை வாங்கி குவித்துருக்கும் இவருக்கு, பாலிவுட் மட்டுமன்றி, உலக அளவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளனர்.
தாரே ஸமீன் பர், லகான், பி.கே, டங்கல், 3 இடியட்ஸ் என பல முத்திரை பதிக்கும் படங்களை கொடுத்த பெருமையும் அமீர்கானுக்கு உண்டு. நடிப்பது மட்டுமன்றி, சமூகத்தில் நிகழும் அநீதிகளை தட்டிக் கேட்பது, மூட நம்பிக்கைகளுக்கு எதிராக குரல் கொடுப்பது என பல சமூக சீர்திருத்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் பிரபலங்களுள் ஒருவர் அமீர்கான். மக்களின் பிரச்னைகளை எடுத்துக் கூறும், சத்யமேவ ஜெயதே எனும் ரியாலிட்டி ஷோ ஒன்றையும் சில வருடங்களுக்கு முன்னர் அமீர்கான் நடத்தி வந்தார்.
கோலாகலமாக 4 நாட்கள் நடந்த மகள் திருமணம்
சமீபத்தில் அமிர்கானின் மகள் இரா கானின் திருமணம் நடைபெற்றது. இரா கான் மற்றும் நுபுர் ஷிகாரே என்பவரை சில ஆண்டுகளாக காதலித்து வந்தார். இதனைத் தொடர்ந்து இருவருக்கும் கடந்த 2022ஆம் ஆண்டு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. திருமண நிச்சயம் ஆகி கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் கழித்து இருவருக்கும் உதய்பூரில் திருமணம் நடந்து முடிந்தது.
மொத்தம் நான்கு நாட்கள் நடைபெற்ற இந்தத் திருமணத்தில் மெஹந்தி, சங்கீத், பஜாமா பார்ட்டி என கோலாகலமாகக் கொண்டாடியுள்ளார்கள். இதன் வீடியோக்கள் இணையதளத்தில் வெளியாகி வைரலாக பகிரப்பட்டு வருகின்றன, இப்படியான நிலையில் அமீர் கான் தனது மகளின் திருமணத்தில் நடனமாடும் வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
ரங் தே பசந்தி பாடல்
அனைவரும் திருமணத்தில் பாடலுக்கு நடனமாடிக் கொண்டிருக்க அமீர் கானை ஆடவைக்க ஒரு டெக்னிக் பயன்படுத்தி இருக்கிறார் அங்கு இருந்த டி.ஜே. அமீர் கான் நடித்து ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியான “ரங் தே பசந்தி” படத்தில் சக்கைப் போடு போட்ட பாடல் ‘மஸ்தி கி பாத்ஷாலா’ பாடலை ஒலிக்கவிட்டார்.
உடனே கன்ட்ரோலை இழந்து தன் போக்கில் அந்த பாடலுக்கு 18 வருஷம் முன்பு போட்ட அதே டான்ஸ் மூவ்ஸை அமீர் கான் ஆடத் தொடங்குகிறார். அவருடன் சேர்ந்து அனைவரும் அந்தப் பாடலுக்கு நடனமாடுகிறார்கள். இதனைத் தொடர்ந்து அவர் நடித்து கயாமத் சே கயாமத் தக் என்கிற படத்தில் ஒரு பாடலை டி.ஜே ஒலிக்க உடனே அவரைச் சென்று கட்டிபிடித்துக் கொள்கிறார் ஆமிர்கான். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் படிக்க: Ayalaan Review: ஏலியனுடன் “பொங்கல்” .. குழந்தைகளைக் குறிவைத்த சிவகார்த்திகேயன்.. அயலான் திரைப்பட விமர்சனம்!
Captain Miller Review: "தரமான ஆக்ஷன் விருந்து" தனுஷின் கேப்டன் மில்லர் பட விமர்சனம் இதோ!