தான் உடற்பயிற்சி செய்யும் போது, உடற்பயிற்சி கருவி முகத்தில் உருண்டு விழுந்து அடிப்பட்டதாக ரம்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ரம்யா கடந்த 2004ஆம் ஆண்டு மிஸ் சென்னை போட்டியில் பங்கேற்றார். பின் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான உங்களில் யார் அடுத்த பிரபு தேவா, கலக்கப்போவது யாரு உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியை நேர்த்தியாக தொகுத்து வழங்கியதன் மூலம் இவர் ஏராளமான ரசிகர்களை பெற்றார்.
இந்நிலையில் 2007ஆம் ஆண்டு ஜோதிகா நடிப்பில் வெளியான மொழி திரைப்படத்தில் துணைக் கதாபாத்திரத்தில் ரம்யா நடித்திருந்தார். அதன்பின் ஓ காதல் கண்மணி, மாசு என்கிற மாசிலாமணி, ஆடை, மாஸ்டர் என பல படங்களில் நடித்திருக்கிறார். இவர் பிட்னசில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். அவ்வப்போது தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.
இவர் சமீபத்தில் உடற்பயிற்சி செய்யும் போது தனக்கு நேர்ந்த விபத்து குறித்து பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது “தசைகளை குறி வைக்கும் சவாலான உடற்பயிற்சி மேற்கொண்டபோது காயம் ஏற்பட்டது. உடற்பயிற்சியின் போது என்னுடைய இடுப்பில் பொருத்திருந்து உடற்பயிற்சியின் கிலோ டெம்பில் தவறுதலாக உருண்டு என்னுடைய முகத்தில் விழுந்தது. கிட்டத்தட்ட எடையின் பாதி என்னுடைய கழுத்தை நெரித்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாக உடனடியாக எனக்கு உதவி செய்தார்கள். எனக்கு எந்த பெரிய பாதிப்பும் ஏற்படவில்லை” என்று பதிவிட்டுள்ளார். மேலும் தனக்கு ஏற்பட்ட காயத்தின் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.
உடற்பயிற்சியின் மீது அதிக ஆர்வம் கொண்ட ரம்யா தனது சமூக வலைதளப் பக்கத்தில் உடற்பயிற்சி தொடர்பான வீடியோக்களை அடிக்கடி பகிர்ந்து வருகிறார். இவர் உடல் பருமன் குறைப்பது குறித்து புத்தகம் ஒன்றை எழுதினார். இதனை நடிகை சமந்தா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து ரம்யாவிற்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.
இதனிடையே ரம்யா கடந்த ஜனவரி மாதம் நடிகர் விஜய்யை சந்தித்து தான் எழுதிய புத்தகத்தை பரிசாக வழங்கினார். மேலும் இது தொடர்பான புகைப்படத்தை ரம்யா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க