ABP's Southern Rising Summit: புதிய இந்தியா தொடர்பான தங்களது கருத்துகளை தெரிவிக்கும் விதமாக, பல்துறை பிரமுகர்கள் பங்கேற்கும் ஏபிபி சார்பிலான “தெற்கின் எழுச்சி” எனும் தலைப்பிலான கருத்தரங்கு சென்னையில் இன்று அதாவது அக்டோபர் 12ஆம் தேது நடைபெற்று வருகிறது. 


பிரபலமாக இருப்பதில் எந்த நன்மையும் இல்லை


இந்தியாவின் தென் மாநிலங்கள் வளர்ச்சி, நிர்வாகம், கல்வியறிவு, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும், ஒட்டுமொத்த தேசத்திற்கும் சிறந்த முன்மாதிரியாக உள்ளன. இந்நிலையில், தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய தென்னிந்திய மாநிலங்களில் நிலவும்  விதிவிலக்கான முன்னேற்றம், கலாச்சார செழுமை மற்றும் சமூக நல்லிணக்கத்தை கொண்டாடுவதற்கும் ஆராய்வதற்கும் ஏபிபி நெட்வொர்க் 'தி சதர்ன் ரைசிங் சம்மிட் 2023' என்ற கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ளது. 




இந்த சிறப்பு மிக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் ராணா டகுபதி பேசியதாவது: “சிறுவயதில் இருந்தே திரைப்படங்களில் ஈர்க்கப்பட்டதால் விஷுவல் எஃபெக்ட்ஸ் துறையில் இருந்து எனது பணியைத் தொடங்கினேன். பிரபலமாக இருப்பது ஒரு வேலை. இருப்பினும் பிரபலமாக இருப்பதில் எந்த நன்மையும் இல்லை. அனைவரையும் AI தொழில்நுட்பம் பாதிக்கும்.


உலகை இயக்கும் அளவுக்கு ஏஐ தொழில்நுட்பம் உள்ளது. சினிமா துறை தொடர்ந்து இயங்கும். ஏற்கெனவே ஓடிடி தளங்கள் சினிமா துறையை மாற்றியுள்ளன. பள்ளிதான் என் பெரிய கனவுக்கான அடித்தளம். நான் பள்ளியில் படிப்பை கற்றுக்கொண்டதை விட அங்கு வாழ்க்கை குறித்து நிறைய கற்றுக் கொண்டேன். இந்தியாவின் உணர்வு என்பது ஒற்றுமை மற்றும் பன்முகத்தன்மையை கொண்டது. நான் பிட்னஸ் ஃப்ரீக் (Fitness Freak) இல்லை. வாரத்தில் மூன்று நாட்கள் பிரியாணி சாப்பிடுகிறேன். பாகுபலி போன்ற படங்களை பார்க்கும்போது உடலை வலுவாக வைக்க தோன்றும். ஆனால் நான் அப்படி இல்லை” எனப் பேசினார். 




ABP Southern Rising Summit 2023 LIVE: ”மௌன ராகம் திரைப்படம் என் மனதிற்கு மிகவும் நெருக்கமானது" - நடிகை ரேவதி