பாலிவுட் நடிகர்களில் முன்னணி நடிகரான அமீர்கான் கூறிய ஒரு தகவல் அவரின் ரசிகர்களுக்கு ஒரு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 35 ஆண்டுகாலமாக பாலிவுட் சினிமாவில் பல வெற்றி படங்களில் நடித்து தனக்கென ஒரு முத்திரையை பதித்த திறமையான நடிகரான அமீர்கான் சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் தான் சினிமாவில் இருந்து சிறிது காலம் ஓய்வு எடுக்க இருப்பதாக ஒரு ஷாக்கிங் தகவலை தெரிவித்துள்ளார். 


 



படு தோல்வியை சந்தித்த 'லால் சிங் சத்தா' :


ஹாலிவுட் சினிமாவில் 'ஃபாரஸ்ட் கம்ப்' எனும் கிளாசிக் திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக் திரைப்படமான 'லால் சிங் சத்தா’ திரைப்படம் சமீபத்தில் நடிகர் அமீர்கான் - கரீனா கபூர் நடிப்பில் வெளியானது. படம் வெளியாவதற்கு முன்னரே பல சர்ச்சைகளை எதிர்கொண்டு பாய்காட் செய்யப்பட்டது. இதன் மூலம் இப்படத்தின் வசூல் பெரும் அளவிற்கு பாதிக்கப்பட்டு பயங்கரமான தோல்வியையும் நஷ்டத்தையும் எதிர்கொண்டது. இது நடிகர் அமீர்கானின் மனநிலையை மிகவும் பாதித்தது. இதையடுத்து நடிகர் அமீர்கான் தயாரிக்கவிருக்கும் அடுத்து திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகமாக இருக்கிறது.


 






 


அமீர்கான் தயாரிக்கும் 'சாம்பியன்ஸ்' :


அந்த வகையில் சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் அமீர்கான் அங்கு பேசுகையில் "இது வரையில் நான் சந்திக்காத ஒரு பெரிய தோல்வியை இப்போது சந்தித்துள்ளேன்.  நான் ஆமீர்கான் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் அடுத்து தயாரிக்க இருக்கும் படத்தின் பெயர் 'சாம்பியன்ஸ்'. இப்படத்தை நான் தயாரிக்க மட்டுமே செய்கிறேன். திறமையான தகுதியான நடிகரை தேர்வு செய்து வருகிறேன். இந்த கதை ஒரு அருமையான அழகான கதை. ஆனால் நான் அதில் நடிக்க போவதில்லை. சிறிது காலம் நடிப்பதில் இருந்து விலகி ஓய்வு எடுக்க விரும்புகிறேன். எனது குடும்பத்துடன் நேரம் செலவழிக்க விரும்புகிறேன். எனது அம்மா குழந்தை குடும்பத்திற்காக நேரம் ஒதுக்கியதில்லை. அதனால் அவர்களுடன் சிறிது காலம் இருக்க விரும்புகிறேன். 'சாம்பியன்ஸ்' ஸ்கிரிப்ட் மீது மிகுந்த நம்பிக்கை உள்ளது. அதனால் நான் நம்பிக்கையுடன் நான் நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் நடிக்க விருப்பம் உள்ளவர்களை அணுகி தேர்ந்தெடுப்பேன்' என தெரிவித்துள்ளார் நடிகர் அமீர் கான். 


 






 


நடிகர் அமீர்கான் ரசிகர்களுக்கு இந்த செய்தி ஒரு பெரிய ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. அவர் விரைவில் திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்பதே அவர்களின் வேண்டுகோளாக உள்ளது.