Aamir Khan:காஃபி வித் கரண் செட்... ஸ்மோக்கிங் பைப்பில் புகைப்பிடிக்கும் ஆமிர் கான்... இணையத்தில் ஹிட் அடிக்கும் ஃபோட்டோ!
அமீர் கான், நடிகை கரீனா கபூர் நடிப்பில் வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி லால் சிங் சத்தா படம் வெளியாக உள்ளது. தமிழில் இப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயிண்ட் நிறுவனம் வெளியிட உள்ளது.

நடிகர் அமீர் கான் 'காஃபி வித் கரண்' படப்பிடிப்புத் தளத்தில் ஸ்மோக்கிங் பைப் கொண்டு புகைப்பிடிக்கும் ஃபோட்டோ வெளியாகி இணையத்தில் வைரலாகி உள்ளது.
ஹாலிவுட்டில் புகழ்பெற்ற நடிகர் டாம் ஹாங்க்ஸ் நடித்து பல விருதுகளைக் குவித்த ஃபாரஸ்ட் கம்ப் எனும் பிரபல திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக இப்படம் உருவாகி உள்ளது.
Just In




அமீர் கான், கரீனா கபூர் நடிப்பில் வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி லால் சிங் சத்தா படம் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. தமிழில் இப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயிண்ட் நிறுவனம் வெளியிட உள்ளது.
நடிகர் நாகசைதன்யா இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், Viacom 18 மோஷன் பிக்சர்ஸ் மற்றும் ஆமிர்கான் புரொடக்ஷன்ஸ் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளனர். அத்வைத் சந்தன் இயக்கியுள்ளார்.
இப்படத்தின் தமிழ் ட்ரெய்லர் முன்னதாக ஜூலை 25ஆம் தேதி வெளியாகி தமிழ் ஆடியன்ஸிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்நிலையில், ’லால் சிங் சத்தா’ படத்துக்கு ப்ரொமோஷன் செய்யும் வகையில், நடிகர் அமீர் கானும் கரீனா கபூரும் காஃபி வித் கரண் நிகழ்ச்சியின் தற்போதைய சீசனில் கலந்துகொண்டுள்ளனர்.
முன்னதாக காஃபி வித் கரண் நிகழ்ச்சி குறித்து வெளியான ட்ரெய்லரில் அமீர் கான் இடம்பெறாத நிலையில் இத்தகவல் அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மேலும், முன்னதாக நிகழ்ச்சி செட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றில் நடிகர் ஆமிர் கான் ஸ்மோக்கிங் பைப் கொண்டு புகைக்கும் ஃபோட்டோ ஒன்று வெளியாகி இணையத்தில் ஹிட் அடித்துள்ளது.
நடிகர் ஆமிர் கான் ஏற்கெனவே காஃபி வித் கரண் 3ஆவது சீசனில் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.