தன் மனதில் பட்டதைச் சொல்லுவதில் தந்தையை உரித்து வைத்தவர் நடிகர் ஆமீர் கானின் மகள் இரா கான். அண்மையில் புதுவருடப் பிறப்பை தனது காதலர் மற்றும் தனது தந்தையுடன் கொண்டாடிய இரா கான். அதுகுறித்துத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களைப் பகிர்ந்திருந்தார்.



கூடுதலாக தான் எடை கூடியது பற்றிய பதிவையும் பகிர்ந்திருந்தார்.








அதில், ”நான் சமீபத்தில் 15 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தேன், உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டேன்.  செல்ஃப் மோட்டிவேஷன் மற்றும் செல்ஃப் இமேஜ் எனக்கானது அல்ல. என் வாழ்நாளின் பெரும்பகுதி நான் மிகவும் சுறுசுறுப்பாக இருந்தேன், ஆனால் கடந்த 4-5 வருடங்களில் நான் ஆக்டிவ்வாக இல்லை. 20 கிலோ எடை கூடினேன். அது எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.மேலும், “இதர விஷயங்களுடன் ஜெர்மனியில் பணிபுரியவேண்டும் என்பதும் இருந்தது. மற்றபடி நான் கணிசமான அளவு எடையை இழக்கவில்லை - எப்படியும் என்னால் அது முடியாது கூட. ஆனால் நான் கடினமாக முயற்சி செய்ய அவ்வப்போது உந்துதலை எனக்கு அளித்துக் கொண்டிருக்கிறேன். இப்போது அந்த உந்துதலைத் தக்கவைத்துக்கொள்ள என்னால் முடிந்த அனைத்தையும் செய்கிறேன்” இவ்வாறு அவர் தனது பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.