அமீர்கான் தயாரித்து நடிக்கும் லால் சிங் சத்தா படமும், யஷ் நடிக்கும் கேஜிஎஃப் படத்தின் இரண்டாம் பாகமும் அடுத்த வருடம் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாக இருக்கின்றன. இரண்டு பெரிய நடிகர்களின் படம் ஒரேநாளில் வெளியாவதால் இரண்டு படங்கல் மேலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது..


அதேசமயம் இந்த இரண்டு படங்களும் ஒரேநாளில் வெளியாவதால் வசூலில் பாதிப்பு ஏற்படலாம் எனவும் கருதப்படுகிறது. இந்நிலையில் தனது படமும் அதே தினத்தில் ரிலீஸ் செய்யப்படுவதற்கு அமீர் கான் கேஜிஎஃப் படக்குழுவிடம் மன்னிப்பு கேட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.




நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட் அவர் இதுகுறித்து பேசுகையில், “என் வாழ்க்கையில் முதல் முறையாக சீக்கியர் கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். அப்படியிருக்க பைசாகி தினத்தன்று (ஏப்ரல் 14) அந்த படத்தை வெளியிடுவதே சிறந்ததாக இருக்கும் என கருதுகிறேன். நான் அடுத்த ஹீரோக்களின் எல்லைக்குள் செல்வதை வெறுப்பவன். 


என்னால் பிறரின் பிஸினஸ் பாதிக்கப்படக் கூடாது என நினைப்பவன். இருப்பினும் கே.ஜி.எஃப் அதிரடி திரைப்படம், என்னுடையது, காதல் கலந்த குடும்பப் படம். எனவே இரு படங்களின் பிஸினஸும் தனித்தனியாக இருக்கும் என நினைக்கிறேன். பிறரை போலவே நானும் கேஜிஎஃப் ரசிகன், ஏப்ரல் 14 அன்று ஏதேனும் ஒரு திரையரங்கில் நானும் கேஜிஎஃப் பார்ப்பேன்.




ஏப்ரல் 14அம் தேதி என்னுடைய லால் சிங் சத்தா படத்தை ரிலீஸ் செய்வதற்காக கேஜிஎஃப் படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் அதன் ஹீரோ யஷிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறேன்.


சில தவிர்க்க முடியாத காரணங்களால்தான் அன்றைய தினத்தை தேர்வு செய்திருக்கிறோம். அதனுடைய காரணத்தை விளக்கி படக்குழுவுக்கு கடிதம் எழுதினேன். நடிகர் யஷுக்கு தொலைபேசியில் அழைத்து நிலைமையை விவரித்து மன்னிப்பும் கேட்டேன்” என தெரிவித்தார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


மேலும் வாசிக்க: பாலியல் புகாரா? உடனடியாக சொல்ல வாட்ஸ் அப் எண்.! கரூரில் உருவான 'நிமிர்ந்து நில் துணிந்து செல்!


Simbu Hansika Reunion: "எனக்கு எந்த பிரச்னையும் இல்ல.." ஹன்சிகா பற்றி சிம்பு கொடுத்த ஷாக் நியூஸ்


”விருது கிடைச்சதே 25 வருஷங்களுக்குப் பிறகுதான் தெரியும்” : அலறவிட்ட பேய்ப்பட நாயகி ஓப்பன் டாக்..