தென்னிந்திய சினிமாவில் சைலண்ட் காதல் ஜோடியாக வலம் வந்தவர்கள் ஆதி மற்றும் நிக்கி கல்ராணி . மரகதநாணயம் உள்ளிட்ட ஓரிரு தமிழ் படங்களிலும் ஜோடியாக நடித்துள்ளனர். இவர்கள் இருவருக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைப்பெற்றது. அந்த புகைப்படங்கள் பல ரசிகர்களுக்கு ஷாக்கிங் சர்ப்ரைஸ் ஆக இருந்தது என்றே கூறலாம். இணையதளங்களிலும் இவர்களின் நிச்சய புகைப்படங்கள் வைரலாக ஷேர் செய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்று (மே 18 ) சென்னையில் எளிமையாக இவர்களது திருமணம் நடைப்பெற்றது. திரைத்துறையை சேர்ந்த நெருங்கிய நண்பர்கள் , மற்றும் உறவினர்கள் முன்னிலையில் எளிமையாக நடந்து முடிந்துள்ளது திருமணம். என்றாலும் கூட இன்னும் புகைப்படங்கள் இப்போதுதான் வெளியாகத் தொடங்கியுள்ளது. திருமணத்தில் விக்னேஷ் சிவன், தெலுங்கு நடிகர்கள் நானி , சுதீப் கிஷன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.
இந்த நிலையில் திருமணத்திற்கு முன்பாக நடத்தப்படும் மஞ்சள் நலங்கு சடங்கு வீடியோ ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது. அதில் அஜித் நடித்த வேதாளம் படத்தில் இருந்து ஆலுமா..டோலுமா பாடல் இசைக்கப்பட்டது. அந்த பாடலுக்கு நடனமாட எல்லோரும் ஆயத்தமாகும் நிலையில் , மணமகன் ஆதி ஒரு சில நடன அசைவுகளால், கொண்டாட்டத்தை துவக்கி வைக்கிறார். மகிழ்ச்சியில் திளைத்திருக்கும் மணமகள் நிக்கி , பரபரப்பாக காணப்படுகிறார். ஆதி-நிக்கி திருமண புகைப்படங்கள்தான் இப்போது செம்ம வைரல்