நடிகர் ஆதிக்கும், நிக்கி கல்ராணிக்கும் நிச்சயதார்த்தம்நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


நடிகர் ஆதியும், நிக்கி கல்ராணியும் நீண்ட நாட்களாக ரிலேஷன் ஷிப்பில் இருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த இருவருக்கும் தற்போது குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 






பிங்க் வில்லா இணையதளம் வெளியிட்ட  தகவலின் படி, தங்களது ரிலேஷன் ஷிப்பை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்து செல்ல நினைத்திருக்கும் இருவரும், தங்களது உறவைப்பற்றி குடும்பத்தினரிடம் சொல்ல அவர்களும் சம்மதித்து இருக்கிறார்களாம். விரைவில் இருவரும் திருமணமும் செய்து கொள்ள இருக்கிறார்களாம். ஆனால் இது அதிகாரப்பூர்வ தகவல் நிக்கிகல்ராணி பக்கத்தில் இருந்தோ, ஆதி பக்கத்தில் இருந்தோ வரவில்லை. 


நிக்கி கல்ராணியும், ஆதியும் முன்னதாக, மல்பு, யாகவராயினும் நா காக்க, மரகரத நாணயம் உள்ளிட்ட படங்களில் ஒன்றாக இணைந்து நடித்திருந்தனர். இதன் மூலம் ஆதியுடன் நெருங்கி பழகிய நிக்கி கல்ராணி, அண்மையில்  நெருங்கிய நண்பர்கள் மட்டும் பங்கேற்ற ஆதி அப்பாவின் பிறந்தநாள் பார்டியிலும் பங்கேற்றுள்ளாராம்.  






ஆதி நடிப்பில் ஓடிடியில் வெளியான கிளாப் திரைப்படம் நல்லவரவேற்பை பெற்றுள்ளது. ஆதி அடுத்ததாக லிங்குசாமி இயக்கத்தில், ராம் பொத்தேனியின் தி வாரியர் படத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.