தெலுங்கு நடிகர் பிரபாஸ் நீண்ட நாள்களாக பேச்சிலராக இருந்து வருபவர் என்பது நம்மில் பலருக்கு தெரியும். அவரது தனிப்பட்ட வாழ்க்கையும், அவர் எப்போது திருமணம் செய்யப் போகிறார் என்பதும் எப்போதும் பேசுபொருளாக இருந்தவை. சமீபத்தில் சில தகவல்களின் அடிப்படையில், `பாகுபலி’ பிரபாஸ் இந்த ஆண்டின் இறுதிக்குள் திருமணம் செய்யப் போகிறார் எனக் கூறப்பட்டுள்ளது. 

Continues below advertisement


மேலும், நடிகர் பிரபாஸின் மாமாவும், தெலுங்கு சினிமாவின் மூத்த நடிகருமான கிருஷ்ணம் ராஜு இதுகுறித்து விரைவில் அறிவிப்பார் எனவும் கூறப்படுகிறது. 


பிரபாஸ் திருமணம் குறித்து ஆந்திராவின் மேற்கு கோதாவரி பகுதியின் கிருஷ்ணம் ராஜு மற்றும் பிரபாஸ் ரசிகர் மன்றத்தின் தலைவர் பேசிய பழைய வீடியோ ஒன்றும் மீண்டும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. பிரபாஸ் யாரைத் திருமணம் செய்துகொள்ள போகிறார் என்பது முடிவு செய்யப்பட்டு விட்டதாகவும், கிருஷ்ணம் ராஜுவின் குடும்பம் விரைவில் அதனை அறிவிப்பார்கள் எனவும் கூறியிருந்தார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருவதோடு, பிரபாஸ் ரசிகர்கள் பலரும் அதனை ஷேர் செய்து வருகின்றனர். 







எனினும், இந்த விவகாரம் குறித்து நடிகர் பிரபாஸ் தரப்பிலோ, அவரது குடும்பத்தினர் தரப்பிலோ எந்தக் கருத்தும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. தற்போது நடிகர் பிரபாஸ் சலார், ஆதிபுருஷ் ஆகிய இரண்டு பெரிய பட்ஜெட் திரைப்படங்களில் முன்னணி வேடத்தில் நடித்து வருகிறார். 


கடந்த சில மாதங்களுக்கு முன்பு, மும்பையில் `ராதே ஷ்யாம்’ படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சிகளின் போது, தனக்கு ஏன் இன்னும் திருமணம் ஆகவில்லை என்பது குறித்து ஜாலியாகப் பேசியிருந்தார் நடிகர் பிரபாஸ். தனது காதல் குறித்து அவரின் கணிப்பு என்ன என செய்தியாளர் ஒருவர் கேட்க, `காதல் பற்றிய எனது கணிப்புகள் அனைத்தும் எப்போதுமே தவறாக இருந்துள்ளன.. அதனால்தான் நான் இன்னும் திருமணம் செய்யவில்லை’ எனக் கிண்டலாக கூற, மொத்த அரங்கமும் சிரித்து மகிழ்ந்தது. 


நடிகர் பிரபாஸ் இந்த ஆண்டு திருமணம் செய்துகொள்ளப் போகிறாரா அல்லது தற்போதைய தகவல்களும் வெறும் வதந்தி தானா என்பதைக் காலம் தான் முடிவு செய்யும். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண