சன் டிவியில் ஒளிபரப்பாகி மிகப்பெரிய வெற்றிபெற்ற சீரியல் நாதஸ்வரம். இதில் இயக்குநர் திருமுருகனின் தங்கையாக நடித்து பிரபலமானவர் ஸ்ருதி. இந்த சீரியல்களை தொடர்ந்து, வாணி ராணி, கல்யாணப்பரிசு, விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா என தொடர்களில் நடித்து வந்தார். 



இந்தநிலையில், பாடி பில்டராக இருந்த அரவிந்த் என்பவருடன் ஸ்ருதி காதலித்து வந்தநிலையில், க டந்த ஆண்டு மே மாதம் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். 


 இப்படியான சூழ்நிலையில், நேற்று (ஆக.02) ஸ்ருதியின் கணவர் அரவிந்த் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தாக தகவல் வெளியாகியுள்ளது. 


இந்நிலையில், ஸ்ருதி பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு தனது திருமண வாழ்க்கை குறித்து முன்னதாக பேட்டி ஒன்றை அளித்தார். தற்போது, இந்த பழைய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 


அந்த வீடியோவில், “கோயம்புத்தூர்ல நடுத்தற குடும்பத்தை சேர்ந்த பெண் நான். அங்கிருந்து டிராவல் பண்ணி இங்க வந்து நடிச்சது எல்லாம் பெரிய விஷயம். அப்போ எனக்கு 21 வயசுதான் ஆச்சு. அப்பவே எனக்கு கல்யாணம் பண்ணி கொடுக்கணும்ன்னு எங்க வீட்ல முடிவு பண்ணிட்டாங்க. அங்கிருந்து கொஞ்சம் கொஞ்சமாக கெஞ்சி என் கல்யாணத்தை 28 வயசுக்கு கொண்டு வந்தேன். 


எனக்குன்னு நிறைய கனவுகள் இருந்துச்சு,  எனக்கு சின்ன வயசுல இருந்தே பாரிஸ் போகணும், நடிக்கணும் ஆசை பட்டேன். அதே மாதிரி உலகம் பூராவும் சுத்தி பார்க்கணும் நினைச்சுட்டு இருக்கேன். 


இப்படி இருக்க மறுபுறம் நான் சீரியல்ல நடிக்குறதுனால எனக்கு ஏற்கனவே திருமணம் ஆச்சுன்னு சொல்லி, வந்த வரன்கள் எல்லாம் தள்ளி போச்சு. பொதுவா ஒருத்தவங்க யூடியூப்ல வீயூஸ்க்காக தப்பான விஷயம் போடுறாங்க. ஆனா அது ஃபெர்ஷனல் வாழ்க்கைய ரொம்ப பாதிக்குது. என்ன தெரிஞ்சவங்க இது பொய் செய்தின்னு கடந்து போய்ருவாங்க, ஆனா இதை பார்க்குற சமூகம், என் பெற்றோர்கள் எப்படி பார்ப்பாங்கன்னு ஒன்னு இருக்குல. இதையெல்லாம் கடந்துதான் வந்தேன். 


கணவர், பெற்றோர்களாம் நம்ம லைப்ல நம்ம கூடதான் இருப்பாங்க. இருந்தாலும் நம்ம லைப்க்கு நம்மதான் இருக்க போறோம். யாரு உங்களை கீழே தள்ளுறாங்களோ, உங்கள மதிக்கலன்னே நீங்க கவலைப்படக்கூடாது. 


போல்டான்ன கேரக்டர், கிளாமரஸான கேரக்டர்லாம் எனக்கு வந்தது. ஆனா நான் நடிக்கலை. ஒருவேளை நடிச்சு இருந்தா பெரிய இடத்துக்கு கூட போயிருக்கலாம். எனக்கு இருக்குறதே போதும்ங்குற மனப்பான்மை இருந்துச்சு” என பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது ஷ்ருதியின் ரசிகர்கள், அவரது சமூகவலைதளப் பக்கங்களில் அவருக்கு ஆறுதல் செய்திகளை அனுப்பி வருகிறார்கள்.