தமிழ் சினிமாவின் மாஸ் நடிகராக உலகெங்கிலும் லட்சக்கணக்கான ரசிகர்களை பெற்ற நடிகர் விஜய் நேற்று தனது 49வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு திரைபிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்துக்களை குவித்து வந்தனர்.
அந்த வகையில் ரசிகர்களை சந்தோஷப்படுத்துவதற்காக அவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வரும் 'லியோ' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலை வெளியிட்டது படக்குழு. பல நாட்களாக இதற்காக காத்திருந்த விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் விஜய் பின்னல் ஒரு சிங்கம் , நெருப்பு கொழுந்து விட்டு எரிகிறது. விஜய் வாயில் சிகரெட் வைத்து கொண்டு இருப்பது போலவும் கையில் துப்பாக்கி ஃபயர் ஆனது போல புகை வருவது போல போஸ்டர் இடம் பெற்று இருந்தது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இரண்டாவது முறையாக இணைந்துள்ள விஜய் சுமார் 14 ஆண்டுகளுக்கு பிறகு நடிகை திரிஷாவுடன் ஜோடி சேர்ந்துள்ளார். இப்படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், மிஷ்கின், கௌதம் மேனன், சாண்டி மாஸ்டர், மன்சூர் அலிகான் என மிகப்பெரிய திரை பட்டாளம் நடித்துள்ளது. அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகி வரும் இப்படத்தின் போஸ்டர் முன்னர் வெளியானதில் விஜய்க்கு பின்னால் ஒரு ஓநாய் இருந்தது. தற்போது வெளியாகியுள்ள போஸ்டரில் சிங்கம் இடம் பெற்று இருந்தது. லியோ படத்தில் நடிகர் விஜயுடன் ஒரு சிங்கம் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன் கிராபிக்ஸ் பணிகளுக்காக பெரிய பட்ஜெட் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.
நடிகர் விஜயின் 'லியோ' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பார்த்த சிறுவன் ஒருவன் விஜய்க்கு அட்வைஸ் செய்துள்ளான். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து விட்டு விஜய் மாமா சிகரெட் எல்லாம் பிடிக்க கூடாது. அது தப்பு வாயில் ரத்தம் வரும், சாப்பிடக்கூட முடியாது என அட்வைஸ் பண்ண வீடியோ சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
வெளியான லியோ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று இருந்தாலும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. கடந்த வாரம் தான் மாணவர்களுக்காக ஒரு விழா ஏற்பாடு செய்து அதில் வெற்றி பெற்ற மாணவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் ஊக்கத்தொகை, பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கினார். மாணவர்கள் மத்தியில் பேசிய விஜய் அவர்களுக்கு பல விஷயங்கள் குறித்து அட்வைஸ் செய்து இருந்தார். ஆனால் இன்று அவருக்கு ஒரு சிறுவன் அட்வைஸ் செய்தது பேசுபொருளாக மாறியுள்ளது.