Arya Captain First Look: கையில் துப்பாக்கி.. அசால்ட் லுக்கில் ஆர்யா.. வெளியானது கேப்டன் பட ஃபர்ஸ்ட் லுக்..!

இயக்குநர் சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில், நடிகர் ஆர்யா நடிக்கும்  “கேப்டன்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. 

Continues below advertisement

இயக்குநர் சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில், நடிகர் ஆர்யா நடிக்கும்  “கேப்டன்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. 

Continues below advertisement

 

மீண்டும் இணைந்த ஜோடி

ஆர்யா  நடிப்பில் அடுத்ததாக வரவிருக்கும் படம்  ‘கேப்டன்’.  “டெடி”  படத்திற்குப் பிறகு ஆர்யா-சக்தி சௌந்தர் ராஜன் ஜோடி மீண்டும் இணைந்து செயல்படுவதால், இப்படம் ஏற்கனவே ரசிகர்கள் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் தற்போது இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடப்பட்டுள்ளது. 

இந்த ஃபர்ஸ்ட் லுக்கை உருவாக்க,  படக்குழு ஒன்றரை ஆண்டுகள் உழைத்துள்ளதாம். கம்ப்யூட்டரில் உருவாக்கப்பட்ட பாத்திரம் சரியான நிலையை அடைய, ஒவ்வொரு மூலக்கூறும் பிக்சல்கள் மூலம் கொண்டுவரப்படவேண்டும். ரத்தம் சூடுபிடிக்கும் பரபர த்ரில் சவாரியாக இப்படம் இருக்கும் என சொல்லப்படுகிறது. இந்த திரைப்படத்திற்காக ஆர்யா தந்த அயராத உழைப்பு,  தீராத அர்ப்பணிப்பு குறித்து தயாரிப்பாளர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

“கேப்டன்" திரைப்படத்தை Think Studios நிறுவனம்,  நடிகர் ஆர்யாவின் The Show People நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளது. படப்பிடிப்பு முடிந்து, தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆர்யாவைத் தவிர இப்படத்தில் சிம்ரன், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, ஹரீஷ் உத்தமன், காவ்யா ஷெட்டி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கோகுல் ஆனந்த், சுரேஷ் மேனன், பரத் ராஜ், அம்புலி கோகுல் மற்றும் பல முக்கிய நடிகர்களும் இணைந்து நடித்துள்ளனர்.

படத்தில் யார் யார் இருக்கிறார்கள்


“கேப்டன்” படத்திற்கு,  D.இமான் இசையமைக்க, கார்கி பாடல்கள் எழுதியுள்ளார். யுவா ஒளிப்பதிவு செய்ய, பிரதீப் E ராகவ் படதொகுப்பு செய்துள்ளார். R.சக்தி சரவணன் சண்டைப்பயிற்சி இயக்குநராக பணியாற்ற, S.S. மூர்த்தி கலை இயக்கம் செய்துள்ளார். V.அருண் ராஜா CG ஹெட்டாக பணியாற்றுகிறார். இப்படத்தை எழுதி இயக்குகிறார் இயக்குநர் சக்தி சௌந்தர் ராஜன். நடிகர் ஆர்யாவின் The Show People மற்றும் Think Studios நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றன. 

 

Continues below advertisement
Sponsored Links by Taboola