மாரி செல்வராஜ் : த்ரூவ் விக்ரமை வைத்து படம் இயக்க இருக்கிறேன்
உதயநிதி : இது எனக்கு கடைசி படம்.
மாரி செல்வராஜ்: தனுஷுக்கு வாக்கு கொடுத்திருக்கிறேன்
உதயநிதி : இது எனக்கு கடைசி படம்.
மாரி செல்வராஜ் : சந்தோஷ் நாராயணன் இசையமைக்கட்டும்
உதயநிதி : இது எனக்கு கடைசி படம். ரஹ்மானை கூப்பிடலாம்
மாரி செல்வராஜ் : யாராவது சின்ன நடிகையாக நடிக்க வைக்கலாம்
உதயநிதி : இது எனக்கு கடைசி படம். கீர்த்தி சுரேஷ் நடிக்கட்டும்
மாரி செல்வராஜ் : படத்தில் ஒரு பாட்டு தான் இருக்கும்
உதயநிதி : இது எனக்கு கடைசி படம். ஏழு பாட்டு வேண்டும்.
யாரோ ஒருவர் : மனசு சரியில்லை கொஞ்ச நேரம் ரீல்ஸ் பார்க்கலாம்
உதயநிதி : இது எனக்கு கடைசி படம்.
இதற்கு யார் கடுப்பானார்களோ இல்லையோ ஒருவர் கடுப்பாகி இருக்கிறார். யார் தெரியுமா இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்.
உதயநிதி ஸ்டாலினை கலாய்த்த ரஹ்மான்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கு மாமன்னன் திரைப்பம் வரும் 29 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. படத்தில் புரோமோஷனில் முழு வீச்சுடன் களமிறங்கி இருக்கிறது படக்குழு. ஒவ்வொரு பேட்டியிலும் பல்வேறு சுவாரஸ்யமான தகவல்கள் வெளிவந்தபடி இருக்கின்றன. அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் மாரி செல்வராஜ், நடிகர் உதயநிதி ஸ்டாலின், ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியவர்கள் கலந்துகொண்டார்கள். அப்போது மாமன்னன் படத்தைத் தொடர்ந்துதான் மேலும் ஒரு படத்தில் நடிக்க திட்டமிருந்ததாகவும் அந்தத் தகவலை முதல் முதலாக தான் ஏ.ஆர்,ரஹ்மானிடம் சொன்னதாகவும் தெரிவித்தார் உதயநிதி. இதையெல்லாம் பார்க்கும்போது ரஹ்மான் என்ன நினைத்தார் என்று கேட்டபோது அதற்கு தனது ஸ்டைலில் நூதனமான பதிலைச் சொல்லியிருக்கிறார் ரஹ்மான்.
எனக்கு இதுதான் ஞாபகம் வந்தது
தனது முதல் படமான ரோஜா படத்திற்கு இசையமைத்தபோது இதுதான் தன்னுடைய கடைசி படம் என்றும் இதற்குமேல் தான் படங்களுக்கு இசையமைக்கப் போவதில்லை என்றும் முடிவெடுத்தாராம் ரஹ்மான். ஆனால் மக்களில் ஆதரவும் அன்பும் தன்னை மீண்டும் படங்களுக்கு இசையமைக்கத் தூண்டியதாக கூறினார். மேலும் தற்போது உதயநிதி மாமன்னன் தனது கடைசிப்படம் என்று சொல்லும்போது தனக்கு இந்த நிகழ்வுதான் நினைவுக்கு வருவதாக கூறினார் ரஹ்மான்.
மாமன்னன்
மாரி செல்வராஜ் இயக்கி உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், ஃபஹத் ஃபாசில், ஆகியவர்கள் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் மாமன்னன். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து தேனி ஈஷ்வர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஜூன் 29 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது மாமன்னன் திரைப்படம்.