ஏ.ஆர் ரஹ்மான்


கடந்த 30 ஆண்டுகளாக இந்திய சினிமாவின் தனித்த அடையாளமாக இருப்பவர் ஏ.ஆர் ரஹ்மான். ஆஸ்கர் முதல் கிராமி வரை இசைத்துறையில் சர்வதேச விருதுகளை வென்றுள்ளார். ஏ.ஆர் ரஹ்மான் சமீபத்தில் தனது மனைவி சாய்ரா பானுவுடன் விவாகரத்தை அறிவித்தார். இந்த தகவல் வெளியானதும் ரஹ்மான் பற்றிய பல தவறான வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவின. ஆர்.ஜே பாலாஜி இயக்கவிருந்த சூர்யா 45 படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்க இருந்த நிலையில் தற்போது இப்படத்தில் இருந்து அவர் விலகியுள்ளார். சாய் அப்பியங்கர் இப்படத்திற்கு புதிய இசையமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சூர்யா படத்தில் இருந்து ரஹ்மான் விலகியதற்கான காரணம் குறித்து விவாதம் தொடங்கியுள்ளது. 


ஓய்வெடுக்கப் போகிறாரா ரஹ்மான்


இசையமைப்பாளர் ரஹ்மான் திரைப்படங்களுக்கு இசையமைப்பதில் இருந்து சில காலம் இடைவெளி எடுத்துக் கொள்ளப்போவதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆறு மாதம் முதல் ஒரு வருட காலம் வரை சினிமாவில் இருந்து ஓய்வெடுக்க ரஹ்மான் முடிவெடுத்திருப்பதாக தெரியவந்துள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை என்றாலும் சமீப காலத்தில் தனிப்பட்ட வாழ்க்கையில் ரஹ்மான் பல சவால்களை எதிர்கொண்டு வருவதால் அவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என கூறப்படுகிறது. 






மேலும் தனது தனிப்பட்ட காரணங்களால் ரஹ்மான் சூர்யா படத்தில் இருந்து விலகியதால் அவரே சாய் அப்பியங்கரை இந்த படத்திற்கு இசையமைப்பாளராக பரிந்துரைத்துள்ளார். கட்சி சேர , ஆச கூட உள்ளிட்ட பாடல்கள் மூலம் வைரலானவர் சாய் அப்பியங்கர். தற்போது லோகேஷ் சினிமேட்டிக் யுனிவர்ஸில் உருவாகி வரும் பென்ஸ் திரைப்படத்திற்கும் சாய் இசையமைத்து வருகிறார். 




மேலும் படிக்க : Rajinikanth : மீண்டும் அதே ஏழு பேர்..மீண்டும் அதே பதில்...மறுபடியும் சிக்கிய ரஜினிகாந்த்


Aamir Khan : ஜெய்பூர் கூலி படப்பிடிப்பில் இணைந்த நடிகர் ஆமீர் கான்...