VTK Audio Lauch : இசை மலையில் உருக வைத்த ஏ.ர். ரஹ்மான் - ஸ்ரேயா கோஷல்... VTK ஆடியோ லான்ச் ஸ்பெஷல் 

Continues below advertisement


தமிழ் சினிமாவின் வித்தியாசமான இயக்குனர்களில் ஒருவரான கௌதம் வாசுதேவ் மேனன் - நடிகர் சிலம்பரசன் கூட்டணியில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படம் "வெந்து தணிந்தது காடு". இவர்கள் இருவரின் கூட்டணியில் இதற்கு முன்னர் வெளியான "விண்ணைத்தாண்டி வருவாயா" மற்றும் "அச்சம் என்பது மடமையடா" திரைப்படம் இரண்டுமே சூப்பர் ஹிட் படங்களாக வெற்றி பெற்ற திரைப்படங்கள். 



மீண்டும் இணையும் மூவரின் கூட்டணி :


ஐசரி கணேஷ் தனது வேல்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான். விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா திரைப்படத்தை தொடர்ந்து "வெந்து தணிந்தது காடு" திரைப்படத்திலும் கௌதம் வாசுதேவ் மேனன் - ஏ.ஆர்.ரஹ்மான் - சிலம்பரசன் கூட்டணி மீண்டும் இணைவதால் சூப்பர் ஹிட் பாடல்களுக்கு குறைவு இருக்காது என்பது நிச்சயம்.  


 






 


மேடையில் உருக வைத்த ஏ. ஆர். ரஹ்மான் - ஸ்ரேயா :


"வெந்து தணிந்தது காடு" திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மிக விமர்சையாக சென்னை பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த இசை வெளியீட்டு விழாவில் ஒரு அசத்தலான பெர்ஃபார்மன்ஸ் கொடுத்தனர் ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் ஸ்ரேயா கோஷல். கௌதம் வாசுதேவ் மேனன் - நடிகர் சிலம்பரசன் கூட்டணியில் சூப்பர் ஹிட் திரைப்படமாக அமைந்த "விண்ணைத்தாண்டி வருவாயா" திரைப்படத்தின் பாடலான "மன்னிப்பாயா..." பாடலை பாடி கூடியிருந்த அனைவரையும் உருக வைத்தனர் ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் ஸ்ரேயா கோஷல். முதல் முறையாக சென்னையில் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் ஸ்ரேயா கோஷல் இருவரும் லைவ் ஷோவில் பாடுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இன்றும் இந்த பாடல் அனைவரின் ஃபேவரட் பாடல் என்பதை யாராலும் மறுக்க முடியாது. 


 






கௌதம் மேனன் ஆர்மி :


பல கோடி ரூபாய் செலவில் பிரமாண்டமான செட் அமைத்து மிகவும் கிராண்டாக இந்த இசை வெளியீட்டு விழாவை ஏற்பாடு செய்துள்ளனர் இப்படத்தின் தயாரிப்பாளரான ஐசரி கணேஷின் வேல்ஸ் நிறுவனம். "வெந்து தணிந்தது காடு" படத்தின் ட்ரைலர் மற்றும் ஆடியோ இன்று வெளியிடப்பட்டது. கௌதம் மேனன் படங்களுக்கென்றே ரசிகர்கள் மத்தியில் ஒரு தனி எதிர்பார்ப்பு உள்ளது. அதை நிச்சயமாக இப்படம் பூர்த்திசெய்யும். உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் இப்படத்தினை திரையரங்குகளில் வெளியிடும் உரிமையை பெற்றுள்ளது. இப்படம் செப்டம்பர் 15ம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் வெளியாகும்.