ஏ.ஆர் முருகதாஸ்
தீனா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஏ. ஆர் முருகதாஸ். தொடர்ந்து ரமணா , கஜினி , 7 ஆம் அறிவு , துப்பாக்கி , கத்தி , சர்கார் , ஸ்பைடர் , உள்ளிட்டப் படங்களை இயக்கியுள்ளார். இதில் ஸ்பைடர் படத்தைத் தவிர்த்து முருகதாஸ் இயக்கிய அனைத்துப் படங்களும் ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்தவை. தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் எஸ்.கே 23 படத்தை இயக்கி வருகிறார். ஸ்ரீ லக்ஷ்மி மூவீஸ் தயாரிக்கும் இப்படத்தில் கன்னட நடிகை ருக்மினி வசந்த் நாயகியாக நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். சுதீப் எளமன் ஓளிப்பதிவும் ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு கையாள்கிறார்கள். இப்படத்தில் துப்பாக்கி படத்தில் வில்லனாக நடித்த வித்யுத் ஜம்வால் நடிக்க இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வ தகவல் வெளியிட்டது.
சிகந்தர் பட டீசர்
ஒரு பக்கம் எஸ்.கே 23 படத்தை இயக்கி வரும் முருகதாஸ் இன்னொரு பக்கம் இந்தியில் சல்மான் கான் நடிக்கும் சிகந்தர் படத்தையும் இயக்கி வருகிறார். ராஷ்மிகா மந்தனா இப்படத்தில் நாயகியாகவும் சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கிறார்கள். சந்தோஷ் நாரயாணன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். சிகந்தர் படத்தின் டீசர் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி சல்மான் கானின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாக இருந்தது. முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் காலமானதைத் தொடர்ந்து சிகர்ந்தர் படத்தின் டீசர் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. தற்போது இன்று சிகந்தர் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.
பாலிவுட்டின் ஒரு பெரும் நடிகர்கள ஷாருக் கான் மற்றும் சல்மான் கான். இரு நடிகர்களின் படங்களை வைத்து எப்போதும் ரசிகர்களிடையில் போட்டி நிலவு வருவது சகஜம் தான். அந்த வகையில் தமிழ் இயக்குநர் அட்லீ இயக்கத்தில் கடந்த ஆண்டு ஷாருக் கான் நடித்த ஜவான் திரைப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. அட்லீ ஷாருக் கானுக்கு கொடுத்தது போல தற்போது ஏ.ஆர் முருகதாஸ் சல்மான் கானை வைத்து ஒரு பிரம்மாண்ட ஹிட் கொடுப்பார் என சல்மான் கான் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள்