தமிழ்நாடு இயக்குநர்கள் சங்க தேர்தல் சமீபத்தில் நடைப்பெற்றது. அதில் தலைவராக மீண்டும் இயக்குநர் செல்வமணியே தேர்வு செய்யப்பட்டார். இதில் செயலாளராக ஆர்.வி.உதயகுமார், பொருளாளராக பேரரசு, இணை செயலாளர்களாக சுந்தர்.சி, ஏ.ஆர். முருகதாஸ், லிங்குசாமி, ஏகம்பவாணன், செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு ரமேஷ்கண்ணா, மனோஜ்குமார், மனோபாலா, சரண் , திருமலை, ஏ.வெங்கடேஷ், ரவிமரியா, ஆர்.கண்ணன், முத்து வடுகு, நம்பி, ரமேஷ் பிரபாகர், கிளாரா உட்பட 19 பேர் போட்டியிட்டனர். இந்த நிலையில் வெற்றி விழா மேடையில் பேசிய ஏ.ஆர்.முருகதாஸ் செல்வமணிக்கும் தனக்கும் இருக்கும் உறவு குறித்து பேசியிருக்கிறார்.






 



அதில் "ரொம்ப இக்கட்டான சூழலில் ஒருநாள் நான் சினிமாவை விட்டு போகப்போறேன் சார்னு செல்வமணி சார்க்கிட்ட போன் பண்ணி சொன்னேன். என்னால போராட முடியலை சார். நான் சினிமாவுக்கு தகுதி இல்லாதவன்னு நினைக்குறேன் சார். நான் கிளம்புறேன் சார் எனக்கு சினிமா வேண்டாம்னு சொன்னேன். இது எங்கள் இருவருக்குமான உரையாடலாக இருந்தது. வேறு யாருக்கும் தெரியாது. அப்போ செல்வமணி சார் சொன்னார், சினிமாவுல எல்லா போராட்டமும் வரும். இது என்ன நூலகமா தினமும் சாப்பாடு கட்டிக்கொண்டு சாப்பிட்டு , புத்தகம் படிச்சுட்டு போக. இல்லை இது என்ன தோட்டமா பூக்களை வேடிக்கை பார்க்க. இது போர்க்களம் . இங்க எதிர்ப்பு வரத்தான் செய்யும். எதிர்த்து நின்னு போராடனும் . போராடி வான்னு சொன்னாரு. அதன் பிறகுதான் அவரிடம் இருந்த போராட்ட குணம் இந்த பக்கமும் கொஞ்சம் வந்தது. நடிகர் சங்கத்துல உங்கள் வலது கையாக இருப்பேனோ இல்லையோ தெரியாது . ஆனால் அதில் ஒரு விரலாக இருப்பேன்.” என்றார் ஏ.ஆர்.முருகதாஸ்.