புத்தாண்டு நாம் நினைத்தது போல புதிய விடியலாக அல்லாமல், பெருந்தொற்றுக் காலத்தின் மூன்றாவது அலையோடு வந்திருக்கிறது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. எனினும், தற்போது நற்செய்தியாக பல்வேறு மாநிலங்களில் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதோடு, மருத்துவமனைகள் காலியாகி வருகின்றன. இந்த சூழலில், நம்மால் இயன்ற வரை நம்மையும், நம்மைச் சுற்றி இருப்பவர்களையும் தொற்றுப் பாதிப்புக்கு இலக்காகமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.


சமீப காலங்களில் நம் உணர்வுகளைக் கலங்க வைத்த வைரல் வீடியோக்களின் தொகுப்பு இதோ...


காஷ்மீரின் 5 வயது செய்தியாளர் ஹஃபீஸா...


 






காஷ்மீரின் 5 வயது குழந்தை ஹஃபீஸாவின் க்யூட்டான வீடியோ ஒன்று இணையத்தில் சமீபத்தில் வைரலாகி வருகிறது. செய்தியாளரான வீடியோவில் வரும் ஹஃபீஸா தன் ஊரின் சாலைகள் கடுமையாக சேதமடைந்திருப்பதைக் க்யூட்டாக முறையிட்டிருப்பது இந்த வீடியோவை வைரலாக்கி உள்ளது. சமீபத்தில் காஷ்மீரில் ஏற்பட்ட பனிப்பொழிவு, மழை ஆகியவற்றின் காரணமாக, ஹஃபீஸாவின் குடியிருப்புப் பகுதிக்கு அருகில் இருந்து சாலைகள் கடுமையாக சேதமடைந்தன. இதனைச் சுட்டிக்காட்ட செய்தியாளர் வேடம் அணிந்திருக்கிறார் 5 வயது ஹஃபீஸா. 


 


74 ஆண்டுகளுக்குப் பிறகு ஒன்று சேர்ந்த சகோதரர்கள்... 


 






இரண்டு 80 வயது முதியவர்களின் உணர்ச்சிப் பெருக்குமிக்க வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. 74 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின் போது பிரிந்து போன சகோதரர்களான முகமது சித்திக், ஹபீப் ஆகியோர் சமீபத்தில் சந்தித்துள்ளனர். பாகிஸ்தானையும் இந்தியாவையும் இணைக்கும் குருத்துவாரா தர்பார் சாஹிபில், சுமார் 74 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் இணைந்துள்ளது காண்போர் அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது. 


 


முழங்கால் அளவுப் பனியில் வாலிபால் விளையாடும் ராணுவத்தினர்


 






நடுங்கும் குளிரில் இந்திய ராணுவத்தினர் முழங்கால் அளவுப் பனியில் நின்றபடி வாலிபால் விளையாடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. 


 


திருடனைச் சேஸிங்கில் பிடித்த மங்களூரு காவலர்.. 


 






கர்நாடக மாநிலத்தின் மங்களூரில் கடந்த ஜனவரி 12 அன்று செல்ஃபோனைத் திருடிச் சென்றவரை 10 நிமிடங்களில் பிடித்ததோடு, கைது செய்துள்ளனர். காவல்துறையினர் திருடனைப் பிடிக்கும் வீடியோ வைரலாகியுள்ளது. 


 


பெண் சிங்கங்களுடன் நடந்து வரும் பெண்...


 






பெண் சிங்கங்களுடன் காட்டுப் பாதையில் பெண் ஒருவர் நடந்து வரும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இது உண்மையான வீடியோவா, போலியானதா என்றும் பல்வேறு கருத்துகள் இதனைச் சுற்றி மையம் கொண்டுள்ளன.