விக்ரம் நடித்த வீர தீர சூரன் திரைப்படம் கடந்த மார்ச் மாதம் வெளியானது. இப்படத்திற்கு பிறகு அவரது அடுத்த படத்திற்கான அறிவிப்பு எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்தது. அவரது 63வது படமாக மண்டேலா மடோன் அஸ்வினின் படம் டேக் ஆஃப் ஆகும் என்று எதிர்பார்த்த நேரத்தில் 96 பிரேம்குமார் - விக்ரம் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியானது. இதையறிந்த ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். 96, மெய்யழகன் படங்கள் ரசிகர்களை மிகவும் கவர்ந்த படமாக போற்றப்படுகிறது. 

Continues below advertisement


விக்ரம் - பிரேம்குமார் கூட்டணி


இந்நிலையில், ஐசரி கணேஷ் தயாரிக்கும் இப்படத்தை பிரேம்குமார் இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. அண்மையில் இயக்குநர் பிரேம்குமார், விக்ரம், ஐசரி கணேஷ் ஆகியோர் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படமும் வெளியானது. மெய்யழகன் படத்தில் பிரேம்குமார் உணர்வூப்பூர்வமான விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பார். ஆனால், விக்ரம் 64 படம் அப்படி இல்லையாம், முழுக்க முழுக்க ஒரு ஆக்சன் படம் என்றே கூறப்பட்டது. பிரேம்குமார் சொன்ன ஒன்லைன் பிடித்து போனதால் விக்ரம் யோசிக்காமல் உடனே ஓகே சொல்லிவிட்டதாக தகவல் வெளியானது.  


விக்ரம் 64 படம் ட்ராப்பா?


இந்நிலையில், விக்ரம் - பிரேம்குமார் கூட்டணியில் உருவாக இருந்த 64 திரைப்படம் படப்பிடிப்புக்கு முன்பே ட்ராப் ஆகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரேம்குமார் கதை சொன்ன விதம் பிடித்திருந்தாலும், விக்ரமிற்கு தயக்கம் ஏற்பட்டுள்ளது. நடிகர் விக்ரம் நான் ஒரு ஆக்சன் ஹீரோ அதற்கு ஏற்றார் போல் கதையை ரெடி செய்ய வேண்டும் என பிரேம்குமாரிடம் கூறியுள்ளாராம். ஆனால், அதற்கு இயக்குநர் பிரேம்குமார் ஏற்க மறுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. விக்ரம் கூறுவது போன்ற கதையை இயக்க இயக்குநருக்கு விருப்பம் இல்லையாம். அவை எனது படங்கள் இல்லை. 96, மெய்யழகன் போன்று தான் இப்படத்தையும் ஆக்சன் படமாக இயக்க விருப்பம் தெரிவித்திருக்கிறார் பிரேம்குமார். ஆனால், விக்ரம் ஒரு பக்கம் அடம்பிடிக்க, மறுபக்கம் பிரேம்குமார் கதையில் மாற்றம் தெரிவிக்காமல் இருப்பதால் கூடிய விரைவில் இப்படம் ட்ராப் ஆக வாய்ப்பு இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 


இயக்குநருடன் ஹீரோ வாக்குவாதம்


விக்ரம் - பிரேம்குமார் கூட்டணியில் உருவாகும் விக்ரம் 64 படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. கண்டிப்பாக மற்றொரு பீல்குட் படமாக இருக்கும் என்பதே ரசிகர்களிடையே ஆர்வத்தை தூண்டியது. விக்ரமை பற்றி சொல்ல தேவையில்லை. ஒரு கதாப்பாத்திரத்திற்காக நடிப்பு அரக்கனாகவே மாறிவிடுவார். ஆனால், படப்பிடிப்புக்கு செல்வதற்கு முன்பே இப்படம் டேக் ஆஃப ஆகாமல் போவது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றம் தான்.