புஷ்பா 2 படத்தில் நடந்த விபரீதம்
அல்லு அர்ஜூன் நடித்த புஷ்பா 2 திரைப்படம் கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி வெளியானது. அப்போது ஹைதராபாத் சந்தியா திரையரங்கத்தின் சிறப்பு காட்சியைப் பார்க்க மனைவி ரேவி, மகன் சாய் தேஜா மற்றும் மகளுடன் வந்தது பாஸ்கர் குடும்பம். அப்போது திரையரங்கத்திற்கு நடிகர் அல்லு அர்ஜூன் வந்ததால் திரையரங்கில் தள்ளுமுள்ளு நடைபெற்றது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கிய பாஸ்கர் குடும்பத்தைச் சேர்ந்த ரேவதி (39) மற்றும் மகன் தேஜா காயமடைந்தார்கள். காயமடைந்த இருவருக்கும் உடனே முதலுதவி அளிக்கப்பட்டது என்றாலும் ரேவதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் மகன் தேஜா அருகில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
அல்லு அர்ஜூன் கைது
கூட்ட நெரிசலில் பெண் உயிரிழந்ததைத் தொடர்ந்து அல்லு அர்ஜூன் மீது, ஹைதராபாத் போலீஸ் ஏற்கனவே வழக்கு பதிவு செய்திருந்தது. இந்த வழக்கின் விசாரணைக்காக அல்லு அர்ஜூனை கடந்த டிசம்பர் 13 ஆம் தேதி காவல்துறை கைது செய்தது. போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளில்லாமல் அல்லு அர்ஜூன் திரையரங்கத்திற்கு வந்ததாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது.
இதையடுத்து, அல்லு அர்ஜூனை, 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க ஹைதராபாத் நாம்பள்ளி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தருணத்தில் தற்போது அல்லு அர்ஜூனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது தெலங்கானா உயர்நீதிமன்றம். நடிகர் என்பதாலேயே, வாழ்வுரிமையை பறிக்க இயலுமா என்றும் கேள்வி எழுப்பியது.
சிறுவன் மூளைச்சாவு
உயிரிழந்த பெண் குடுமப்த்திற்கு நடிகர் அல்லு அர்ஜூன் 25 லட்சம் இழப்பீடு வழங்கியதைத் தொடர்ந்து சிறுவன் தேஜாவின் மருத்துவ செலவையும் பார்த்து வருகிறார். கடந்த 11 நாட்களாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை இருந்து வந்த தேஜா மூலைச்சாவு அடைந்துள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.