1983 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா கோப்பையை வென்றது. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் போட்டியில் இந்திய அணியை கபில் தேவ் தலைமை தாங்கினார். இதனை மையமாக கொண்டு 83 படம் எடுக்கப்பட்டுள்ளது.


இந்தப் படத்தில் ஜீவா, ரன்வீர் சிங் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இதில் கபில் தேவ் கதாபாத்திரத்தில் ரன்வீர் சிங் நடிக்கிறார். ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ரன்வீர் சிங் தீபிகா படுகோன் இந்தப்படத்தை தயாரிக்கின்றனர். இந்தப்படத்தின்  டீசர் தற்போது வெளியாகியிருக்கிறது. படத்தின் ட்ரெய்லர் வரும் 30 ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படம் டிசம்பர் 24 ஆம் தேதி வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.