விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இயக்கத்தில் விஜய் சேதுபதி நயன்தாரா நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'நானும் ரவுடி தான்'. இந்த திரைப்படம் விக்னேஷ் சிவனின் இரண்டாவது திரைப்படம். இதற்கு முன் 2017 ஆம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளியான போடா போடி திரைப்படத்தைதின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதன் பின் தனுஷ் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தில் துணை நடிகராக சின்ன கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருந்தார். அதன் மூலம் தனுஷ் நட்ப்புறவு ஏற்பட்டு தனுஷின் உதவியுடன் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அடுத்த திரைப்படமான நானும் ரவுடிதான் திரைப்படத்தை இயக்கினார்.
நானும் ரவுடி தான் திரைப்படம் வெளியாகி இன்றுடன் ஏழு வருடங்கள் நிறைவடைகிறது. இதனை கொண்டாடும் விதமாக இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு தனது நன்றிகளையும் சந்தோஷத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.
நானும் ரவுடி தான் திரைப்பட ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட வீடியோவை பதிவிட்டு ஏழு வருட சந்தோஷ அனுபவம் எனக்கு அனைத்தும் கொடுத்த படைப்பு இந்த திரைப்படம் எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் தனுஷ் சாருக்கு நான் என்றும் கடமைப்பட்டுள்ளேன் என நெகிழ்ச்சிமிக்க பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
இந்த திரைப்படம் விக்னேஷ் சிவனின் திரை வாழ்விலும் சொந்த பெரிய திருப்புமுனையாக அமைந்தது. விஜய் சேதுபதியின் அசத்தலான நடிப்பிலும் நயன்தாராவின் வெகுளியான நடிப்பிலும் திரைப்படம் ப்ளாக் பஸ்டர் ஹிட்டானது. இந்த திரைப்படத்தின் போதுதான் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் காதலில் வயப்பட்டனர். கிட்டத்தட்ட 7 வருட காதலுக்கு பிறகு கடந்த ஜூன் மாதம் ஒன்பதாம் நாள் இந்த ஜோடி கரம் பிடித்தனர். மேலும் சில வாரங்களுக்கு முன் இவர்கள் இருவரும் பெற்றோர் ஆகிவிட்டதாக அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டனர்.
நானும் ரவுடிதான் திரைப்படத்தில் விஜய் சேதுபதி ஒரு போலீசின் மகனாக, நடுத்தர குடும்பத்தில் பிறந்த இளைஞனாக, டுபாக்கூர் ரவுடியாக வலம் வருவார். நயன்தாரா முற்றிலும் மாறுபட்ட நடிப்பில் காது கேட்காத பெண் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி பாண்டியாகவும் நயன்தாரா காதம்பரியாகவும் தங்களது அற்புதமான நடிப்பை வெளிக்காட்டினர். ஆர் யூ ஓகே பேபி முதல் சொல்லுங்க நான் இப்ப என்ன பண்ணனும் வரை டயலாக்களும் மாஸ் தான்.நானும் ரவுடி தான் திரைப்படத்தின் 7 வெற்றி ஆண்டுகளை கொண்டாடும் விதமாக நடிகர் விஜய் சேதுபதியும் சமூக வலைத்தளங்களில் போஸ்டர் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்திருந்தார். பாடல்கள் அனைத்துமே சூப்பர் டூப்பர் ஹிட். ''தங்கமே'' முதல் ''கண்ணான கண்ணே'' வரை இன்றும் அனைவரின் பிளே லிஸ்டிலும் நானும் ரவுடிதான் நிச்சயம் இருக்கும்.