68வது தேசிய திரைப்பட விருதுகளை மத்திய அரசின் திரைப்பட விழாக்கள் இயக்குநரகம் அறிவித்த நிலையில் இன்று விருது வழங்கும் விழா நடைபெறவுள்ளது.
கடந்த ஜூலை 22 ஆம் தேதி 68வது தேசிய திரைப்பட விருதுகளை மத்திய அரசின் திரைப்பட விழாக்கள் இயக்குநரகம் அறிவித்தது. அதில் 2020 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் டிசம்பர் 31 ஆம் தேதி வரை திரைப்பட வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட திரைப்படங்கள் விருதுக்கு தகுதிப் பெற்றுள்ளது. இந்தியாவில் திரைப்படம் எடுக்க உகந்த நகரமாக மத்தியப்பிரதேசம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்த விருது வழங்கும் விழா குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு தலைமையில் இன்று மாலை நடைபெறுகிறது. இதற்காக விருது பெறுபவர்களும், பிற திரையுலக பிரபலங்களும் டெல்லி சென்றுள்ளனர். மேலும் இந்நிகழ்ச்சியில் சமீபத்தில் தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்ட பிரபல இந்தி நடிகை ஆஷா பரேக்கிற்கும் விருது வழங்கப்படுகிறது. இதுதொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.
தமிழ்:
- சிறந்த படம் - சூரரைப்போற்று
- சிறந்த நடிகர் - நடிகர் சூர்யா (சூரரைப்போற்று ) ( அஜய் தேவ்கனுடன் பகிர்ந்து கொள்கிறார்)
- சிறந்த பின்னணி இசை - ஜிவி பிரகாஷ் குமார்
- சிறந்த நடிகை - அபர்ணா பாலமுரளி (சூரரைப்போற்று )
- சிறந்த திரைக்கதை - சுதா கொங்கரா மற்றும் ஷாலினி உஷா நாயர் (சூரரைப்போற்று)
- சிறந்த வசனம் - இயக்குநர் மடோனா அஸ்வின் ( மண்டேலா)
- சிறந்த அறிமுக இயக்குநர் - இயக்குநர் மடோனா அஸ்வின் ( மண்டேலா)
- சிறந்த படத்தொகுப்பு - ஸ்ரீகர் பிரசாத் ( சிவ ரஞ்சனியும் சில பெண்களும்)
- சிறந்த தமிழ் படம் - சிவ ரஞ்சனியும் சில பெண்களும்
- சிறந்த துணை நடிகை - லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி
மலையாளம்
- சிறந்த இயக்குநர் - கே.ஆர்.சச்சிதானந்தன் (அய்யப்பனும் கோஷியும்)
- சிறந்த மலையாள படம் - திங்கலஞ்ச நிச்சயம்
- சிறந்த துணை நடிகர் - பிஜூ மேனன் (அய்யப்பனும் கோஷியும்)
- சிறந்த சண்டைக்காட்சி வடிவமைப்பு - அய்யப்பனும் கோஷியும்
- சிறந்த தயாரிப்பு - கப்பேலா
- சிறந்த பின்னணி பாடகி - நஞ்சம்மா (அய்யப்பனும் கோஷியும்)
இந்தி
- சிறந்த நடிகர் - அஜய் தேவ்கன்(tanhaji unsung warrior)
- சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம் - tanhaji unsung warrior
- சிறந்த ஆடை வடிவமைப்பு - நச்சிகேத் பார்வே & மகேஷ் ஷெர்லா (tanhaji unsung warrior)
- சிறந்த பாடலாசிரியர் - மனோஜ் முண்டாஷிர் (சாய்னா)
- சிறந்த இந்தி படம் - Toolsidas Junior
- குழந்தை நட்சத்திரத்திற்கான சிறப்பு விருது - வருண் புத்ததேவ் ( Toolsidas Junior)
தெலுங்கு
- சிறந்த தெலுங்கு படம் - கலர் போட்டோ
- சிறந்த நடனம் - சந்தியா ராஜூ ( நாட்யம்)
- சிறந்த இசை - தமன் ( அல வைகுந்தபுரமுலோ)
- சிறந்த ஒப்பனை - டிவி ராம்பாபு (நாட்யம்)
கன்னடம்
- சிறந்த கன்னட படம் - டோலு (Dollu)
- சிறந்த ஆடியோ வடிமைப்பு (லோகேஷன்) - ஜோபின் ஜெயன் (டோலு -Dollu)
பிற விருதுகள்
- சிறந்த பின்னணி பாடகர் - ராகுல் தேஷ்பாண்டே (Mi Vasantrao - மராத்தி)
- சிறந்த ஒளிப்பதிவாளர் - சுப்ரதிம் போல் (Avijatrik - The Wanderlust of Apu) ( பெங்காலி)
- சிறந்த குழந்தை நட்சத்திரம் - அனிஷ் மங்கேஷ் ( டக் டக்) & அகன்ஷா பிங்கிள்,திவ்யேஷ் இந்துல்கர் (சுமி)
- சிறந்த குழந்தைகள் திரைப்படம் - சுமி (மராத்தி)
- சிறந்த பெங்காலி படம் - Avijatrik (The Wanderlust of Apu)
- சிறந்த அசாம் படம் - Bridge
- சிறந்த மராத்தி படம் - Goshta Eka Paithanichi (Tale of a Paithani)
- சிறந்த துளு படம் - Jeetige