National Film Awards: நாட்டின் 68வது தேசிய திரைப்பட விருதுகள் நாளை அறிவிக்கப்படவுள்ளது. இந்நிலையில் நடிகர் சூர்யா நடித்த சூரரைப் போற்று மற்றும் ஜெய்பீம் படங்களுக்கு விருதுகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இந்திய அரசு ஆண்டு தோறும் நாடு முழுவதும் வெளியான மிகச் சிறந்த திரைப்படங்களுக்கு விருதுகள் வழங்கி திரைப்பட கலைஞர்களை பாராட்டியும், கௌரவப்படுத்தியும் வருகிறது. குறிப்பாக ஒவ்வொரு துறை சார்ந்த கலைஞர்களுக்கு சிறப்பு விருதுகளையும் வழங்கியும் வருகிறது. இதில், கடந்த ஆண்டு வழங்கப்பட்ட தேசிய விருதில், நடிகர் தனுழ்ஹ், விஜய் சேதுபதி, இயக்குநர் வெற்றி மாறன், இசை அமைப்பாளர் டி.இமான், நடிகர் பார்த்திபன், குழந்தை நட்சத்திரம் நாகவிஷால் ஆகியோருக்கு தேசிய விருதுகள் அளிக்கப்பட்டன. 






இந்நிலையில், நடிகர் சூர்யா தனது 47வது பிறந்த நாளை, ஜூலை 23ம் தேதி, அதாவது  நாளை மறுநாள் கொண்டாடவிருக்கிறார். இந்நிலையில் நாளை மாலை மத்திய அரசால்  68வது தேசிய திரைப்பட விருதுகள் குறித்த அறிவிப்புகள் அறிவிக்கப்படவுள்ளன. இந்நிலையில், நடிகர் சூர்யா நடித்து உலக சினிமா கவனத்தினை ஈர்த்து, ஆஸ்கார் வரை சென்ற சூரரைப் போற்று மற்றும் ஜெய் பீம் படங்களுக்கு விருதுகள் வழங்கப்படலாம் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரண்டு படங்களும் சூர்யாவின் நடிப்போடு இயக்குனர்கள் மற்றும் துணை நடிகர்கள் என அனைவரது பணியும் பெரிதும் பாராட்டப்பட்டது. குறிப்பாக ஜெய்பீம் படத்தில் நடித்த நடிகர் மணிகண்டனுக்கு துணை நடிகருக்கான விருது கிடைக்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. ஜெய்பீம் மற்றும் சூரரைப் போற்று ஆகிய படங்கள் மூலம் சர்வதேச கவனத்தினைப் பெற்றதன் மூலம், இந்த ஆண்டு ஆஸ்காரின் கலை மற்றும் அறிவியல் குழுவின் உறுப்பினராக சூர்யா அழைக்கப்பட்டுள்ளார். இதன் மூலம், ஆஸ்கார் விருதின் கலை அறிவியல் குழுவின் உறுப்பினராகும் முதல் தென்னிந்திய நடிகர் எனும் பெருமையினை சூர்யா பெறுகிறார். 


மேலும், இப்படங்கள் விருதினைப் பெரும் பட்சத்தில் அது நடிகர் சூர்யாவின் பிறந்த நாள் பரிசாக அமையக்கூடும் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர். குறிப்பாக இதனை தமிழ்நாட்டில் உள்ள நடிகர் சூர்யாவின் ரசிகர்களும் கேரளாவில் உள்ள சூர்யாவின் ரசிகர்களும் பெருமளவில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண