வெந்து தணிந்தது காடு படம் வெளியாகி சில நாட்கள் ஆன நிலையில், மல்லிப்பூ பாடலை 50,000 நபர்கள் ரீல்ஸ் செய்துள்ளனர். சிம்புவின் நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு படம், முதலில் கலவையான விமர்சனத்தை பெற்றது. இருப்பினும் பாக்ஸ் ஆஃபிஸ் ரீதியாக வசூல் வேட்டை புரிந்தது.


மறக்குமா நெஞ்சம், மல்லி பூ பாடல்தான் நல்லா இருக்கு அந்த பாட்டுக்காகதான் நான் படத்தை பார்த்தேன் என்று மக்கள் கருத்து தெரிவித்து வந்தனர் முன்பு, மறக்குமா நெஞ்சம் பாடல் ட்ரெண்டாகி இருந்து வந்தது. அதற்கும் ட்ஃப் கொடுக்கும் வகையில், மது ஸ்ரீ குரலில் மல்லி பூ பாடல் பட்டி தொட்டியெங்கும் பரவி வருகிறது.






இப்பாடலை எல்லோரும் லூப் மோடில் கேட்டு ரசித்து கொண்டிருக்கும் வேளையில், இதை 50,000 நபர்கள் ரீல்ஸ் செய்துள்ளனர். அதற்காக நடிகர் சிம்பு, ஆதரவு தெரிவித்த ரசிகர்களுக்கு நன்றி என ட்வீட் செய்துள்ளார். 


இப்பாடலின் வீடியோ வெர்ஷனும் வெளியானது, அதில் சிம்புவின் இயல்பான நடன அசைவுகள் க்யூட்டாக இருந்தாலும், பாட்டின் லாஜிக் ஏற்கும் வகையில் இல்லை. மல்லி பூ ஏன் வைக்கவில்லை என கணவன் கேட்க, அந்த மனைவி, மல்லிப்பூ பாடலை வீடியோ காலில் பாட ஆரம்பித்து விடுவார். அதற்கு அங்குள்ள ஆண்கள் நடனமாட துவங்கி விடுவர்.


 






எந்த ஊரில் வீடியோ காலில் இவ்வளவு குவாலிட்டியான ஆடியோ கேட்கும் அதுவும் பின்ணனி இசையுடன் எப்படி கேட்கும். அதனால் பாடல் மட்டும் கேட்டு இசைக்கு மயங்கிய அனைவரும் வீடியோவை பார்த்து டென்ஷன் ஆகிவிட்டனர். சினிமாவில் லாஜிக் பார்க்க ஆரம்பித்தால் எந்த படத்தையும் பார்க்க முடியாது என்பது மறுக்க முடியாத கருத்தாகும்