திருப்பத்தூர் மாவட்டத்தில் புஷ்பா பட பாணியில் காரில் வைத்து செம்மரம் கடத்தி வந்த சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
செம்மர கடத்தல்:
ஆந்திராவில் சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரம் வெட்டி வருகிறார்கள். கடத்தல்காரர்கள் செம்மரங்களை வெட்டி வெளிநாடுகளுக்கு கொண்டு செல்வதை தடுக்க அரசு பல்வேறு ஆந்திர அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கடத்தல்காரர்கள் செம்மரங்களை வெட்டி அவற்றை வனத்திலோ அல்லது அருகில் உள்ள பகுதிகளிலோ புதைத்து வைத்து விட்டு, பின் போலீஸ் கண்காணிப்பு குறையும் போது, அவற்றை கடத்தி செல்வதாக கூறப்படுகிறது.
ரகசிய தகவல்:
இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் கருப்பனூர் பகுதியில் செம்மரக்கட்டைகள் கடத்தி செல்வதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா அவர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
மேலும் விசாரணையில் கொடுமாப்பள்ளி பகுதியை சேர்ந்த விக்கி (எ) விக்னேஷ் (வயது 30) என்பவர் பிகேபி நகர் பகுதியில் உள்ள கிருஷ்ணவேணி என்பவருடைய வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கு செம்மரம் வெட்டுவதற்காக ஆட்களை சேகரித்து அனுப்பி வைத்திருந்தது தெரிய வந்தது.
இதையும் படிங்க: Virat Kohli : இந்தியாவை விட்டு வெளியேறும் கோலி! புது வீடும் ரெடி.. எங்கே தெரியுமா?
சோதனையில் சிக்கிய முக்கிய பொருட்கள்:
இந்த நிலையில் அங்குச்சென்ற போலீசார் மற்றும் வனத்துறையினர் வீடு பூட்டி இருந்த நிலையில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அதில் ஒரு தனி அறையில் செம்மரம் வெட்டுவதற்கான, 10 கோடாரி, டிராவல் பேக், டார்ச் லைட், மரம் அறுப்பதற்கான ரம்பம், மற்றும் லுங்கிகள் உள்ளிட்டவைகள் இருந்தன அதனை வனத்துறையினர் பறிமுதல் செய்து வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.
போலீசார் வலை வீச்சு:
மேலும் இது தொடர்பாக திருப்பத்தூர் மாவட்டம் மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்து ஆந்திர மாநிலத்தில் செம்மரக்கட்டைகள் வெட்ட ஆட்களை சேகரித்து வந்த விக்கி என்ற விக்னேஷ் போலீசார் மற்றும் வனத்துறை அதிகாரிகள் வலைவீசி தேடி வருகின்றனர்.
செம்மரக்கட்டைகளை வெட்டி திருப்பத்தூர் மைய பகுதியில் பதுக்கி வைத்து வெளி மாநிலங்களுக்கு விற்பனை செய்து வந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது மேலும் இந்த குற்ற சம்பவத்தில் யார் பின்புலத்தில் இயங்குகின்றனர் எனவும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
மேலும் வனத்துறையினர் கண்களில் மண்ணைத் தூவி இத்தனை நாட்கள் செம்மரம் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டு வந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
புஷ்பா பட பாணியில்..
மேலும் சமீபத்தில் வெளியான புஷபா 2 திரைப்படமும் செம்மர கடத்தலை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்தது. அந்த முதல் பாகத்தில் வாகனங்களில் வைத்து செம்மரங்களை கடத்தும் போன்ற காட்சிகள் இடம்பெற்றிருக்கும். அதில் ஒரு பால் வண்டியில் வைத்த செம்மரங்களை கடத்துவது போன்ற காட்சி இடம் பெற்றிருக்கும். தற்போது கிட்டத்தட்ட அதே பாணியில் காரில் வைத்து செம்மரம் கடத்தப்பட்டடுள்ளது.