நாளையத்தீர்ப்பு படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான நடிகர் விஜய், தனது சினிமா வாழ்கையில் 29 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார். பல்வேறு விமர்சனங்கள், வெற்றிகள், தோல்விகள் என அவர் கடந்து வந்த இந்தப்பாதை உண்மையில் கடினமானதுதான். இந்த வெற்றியை அவரது ரசிகர்கள் சமூகவலைதளங்களில் பல்வேறு பதிவுகளை வெளியிட்டு கொண்டாடி வருகின்றனர்.


குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், அறிமுகமான விஜய் பயந்து இருப்பது போலவும், அதன் பக்கத்தில் தற்போதைய விஜய் கிரீடத்தை வைத்து அமர்ந்திருப்பதும் போலவும் ஒரு புகைப்படம் உலாவி வருகிறது. 





இது மட்டுமன்றி விஜய் படங்களில் அவர் அறிமுகமாகும் வீடியோ காட்சிகள் உள்ளிட்ட பலவற்றை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 


மாஸ்டர் படப்பிடிப்பின் போது நெய்வேலியில் படப்பிடிப்பு தளத்தில் இருந்த விஜயை வருமான வரித்துறையினர் வீட்டிற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். சோதனை முடிந்த நிலையில், அவர் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். இதனிடையே மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு நெய்வேலியில் நடப்பதை தெரிந்து கொண்ட ஏராளனமான விஜய் ரசிகர்கள் அங்கு திரண்டனர். அவர்களுக்கு பேருந்தில் ஏறி, கையசத்த விஜய் செல்ஃபியும் எடுத்துக்கொண்டார். அந்த தொடர்பான வீடியோ அப்போது மிகப் பெரிய அளவில் வைரலானது. அந்த வீடியோவை தற்போது ட்ரெண்ட் செய்யும் ரசிகர்கள் அதன் பின்னணியில், கில்லிப் படத்தின் பாடலை சேர்த்து பதிவிட்டு வருகின்றனர்.