Budget Padmanabhan : விவேக்கின் காமெடி கலாட்டா... சிக்கனத்தில் சிதறவிட்ட 'பட்ஜெட் பத்மநாபன்' .. இவ்ளோ வருஷங்களாச்சா..

காமெடி, ஆக்ஷன், சென்டிமென்ட் என அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்த 'பட்ஜெட் பத்மநாபன்' வெளியாகி இன்றுடன் 23 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.

Continues below advertisement

குறைந்த பட்ஜெட்டில் வெற்றிப்படங்களை கொடுக்கும் வித்தகரான விசுவிடம் உதவி இயக்குநராக இருந்து பின்னர் இயக்குநரான டி.பி.கஜேந்திரன் இயக்கத்தில் வெளியான சூப்பர் ஹிட் நகைச்சுவை திரைப்படமான 'பட்ஜெட் பத்மநாபன்' வெளியாகி இன்றுடன் 23 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. 

Continues below advertisement

நடிகர் பிரபு, ரம்யா கிருஷ்ணன், விவேக், மும்தாஜ், மணிவண்ணன், கோவை சரளா உள்ளிட்ட பலர் நடிப்பில் முழு நீள நகைச்சுவை படமாக பார்வையாளர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்த ஒரு திரைப்படம். சிறு வயதில் கடன் பிரச்சனையால் தனது சொந்த வீட்டை விட்டு வெளியேறும்  கசப்பான அனுபவத்தால் பணத்தை சிக்கனமாக செலவு செய்யும் நபராகிறார் பிரபு. 

ரம்யா கிருஷ்ணன் - பிரபு திருமணத்திற்கு பிறகு சிக்கனமாக குடும்பத்தை அவர் நகர்த்தும் பல இடங்களில் குடும்பத்திற்குள் தேவையில்லாத சண்டை சச்சரவுகள் வெடிக்கின்றன. கைவிட்டு போன சொந்த வீட்டை மீட்டுவதற்காக பிரபு சிக்கனமாக செலவு செய்து வருகிறார். அவர் அந்த வீட்டை மீட்டாரா? அதனால் ஏற்படும் சிக்கல் சுற்றியே கதை நகர்கிறது. 

ரம்யா கிருஷ்ணனை திருமணம் செய்து கொண்ட பிறகு கூட உறவுகள் மீது காட்டும் அக்கறையை காட்டிலும் பணத்தின் மீதுதான் அவரின் முழு கவனமும் இருக்கிறது. ரம்யா மூன்று குழந்தைகளை பெற்றெடுத்த பிறகு பிரபுவின் வாழ்க்கையில் மேலும் பல பிரச்சனைகள் அதிகரிக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக உறவுகளின் முக்கியத்துவத்தை பிரபு உணர்கிறார். அவர் இழந்த வீட்டை மீட்கிறாரா என்பதுதான் படத்தின் கிளைமாக்ஸ்.

மிகவும் சீரியஸான காரணம் பின்னணியில் இருந்தாலும் கதை முழுக்க நகைச்சுவையை சிதறவிட்ட விவேக், மணிவண்ணன், கோவை சரளா காம்போ படத்திற்கு ஹைலைட். பிரபு தான் படத்தின் ஹீரோ என்றாலும் ஒட்டுமொத்த ஆடியன்ஸையும் கவர்ந்தவர் விவேக் என்றால் அது மிகையல்ல. குழந்தைகளை பார்த்துக் கொள்ள பணிப்பெண்ணாக மும்தாஜ் என்ட்ரி கொடுக்கிறார். ஆனால் அவர் பிரபுவின் முதலாளியின் மகனை விட்டு பிரிந்த மனைவி என்பது பிறகே தெரிய வருகிறது.  

காமெடி, ஆக்ஷன், சென்டிமென்ட் என அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்த இந்த குடும்ப திரைப்படம் தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடத்தில் ரீ மேக் செய்யப்பட்டு வெளியானது. 

Continues below advertisement
Sponsored Links by Taboola