90ஸ் கிட்ஸ் அதிகமாக பார்த்த படங்களின் பட்டியலில் முதன்மையானது "அலைபாயுதே". மணிரத்னம் இயக்கத்தில், ஏ. ஆர். ரகுமான் இசையில், பிசி ஸ்ரீராம் ஒளிப்பதிவில் 90-களில் அனைவராலும் ரசிக்கப்பட்ட படம். தமிழ் சினிமாவின் சாக்லேட் பாய் மாதவனின் (மேடி) முதல் படம் இது. 


ஏப்ரல் 14, 2000-இல் படம் வெளியாவதற்கு முன்பே பாடல்கள் வேற லெவல் ஹிட். "சக்தி உன்ன நான் விரும்பல ! காதலிக்கல! அனா அதெல்லாம் நடந்துருமோன்னு பயமா இருக்கு யோசிச்சுட்டு சொல்லு" என்னும் டயலாக் தெரியாத மில்லெனியல் கிட்டை கண்டுபிடிக்கமுடியாது.




காதலை வேறு ஒரு கோணத்தில் வெளிப்படுத்திய வசங்கள் படத்திற்கு ஒரு பிளஸ் . காதலிப்பது ஒரு விளையாட்டு என்றால் கல்யாணம் என்பது ஒரு ஒரு மிக பெரிய சீரியஸ் விளையாட்டு  மில்லினியல் காதலை மிக அருமையாக இயக்குனர் கூறி இருப்பார் .படத்தின் வெற்றியை தொடர்ந்து ஹிந்தியில் " சாத்திய " என்னும்  பெயரில்  இந்த படம் ரீமேக் செய்யப்பட்டது . ராணி முகேர்ஜி மற்றும் விவேக் ஓபராய் படத்தின் நாயகர்களாக நடித்திருப்பார்கள் 




மணிரத்னம் மற்றும் பிசிஸ்ரீராமின் மேஜிக்  படம் முழுக்க வசனங்கள் இல்லாத இடத்தில் வசனமாக அமைத்து இருக்கும். மணிரத்னமின் ட்ரேட் மார்க் காட்சிகளான  பஸ், கண்ணாடி மற்றும் ட்ரெயின்  காட்சிகள்  படத்தின் வேறு ஒரு அழகான அம்சம் . படம் முழுக்க நகரும் ரகுமானின் இசை. மிடில் கிளாஸைச் மருத்துவம் படிக்கும் ஷாலினி, ஐடியில் தனது பயணத்தை தொடரும் மாதவன். இவர்களின் காதல் மற்றும் பெற்றோருக்கு தெரியாமல் செய்துகொள்ளும் திருமணம் அதற்குப் பிறகான வாழ்க்கை மாற்றங்கள் என அழகியல் அழுத்தம்தான் அலைபாயுதே .




மில்லெனியல் காதலுக்கு தொடக்கமாக அமைந்த அலைபாயுதே, 21 ஆண்டுகள் கழித்தும் அதே எனர்ஜியுடன் கொண்டாடப்படுகிறது. இன்னும் 20 ஆண்டுகள் கழித்தும் வசனங்கள் ஒப்பிக்கப்படும் லவ் ட்ரேட்மார்க்தான் அலைபாயுதே.