தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குநராக வளம் வருபவர் ராஜமெளலி.  மாவீரன், பாகுபலி, ஆர் ஆர் ஆர் ஆகிய படங்களை பழங்காலத்து செட்-அப்பில் பிரம்மாண்டமாக படம்பிடித்து வெற்றி பெற்றவர் ராஜமெளலி. இவர் பெயருக்கு ஏற்றது போல் ராஜா காலாத்து கதைகளை இயக்குவது  இவருக்கு ரொம்பவே பிடித்த ஒரு விஷயமாக இருந்து வருகிறது. மகாபாரதம் கதையை படமாக இயக்குவது பான் இந்திய இயக்குநரின் நீண்ட நாள் கணவாக இருந்து வருகிறது. அவர் தந்தையாகிய  வி.விஜயேந்திர பிரசாத்திடம் இருந்துதான் இப்படிப்பட்ட கதைகளை இயக்க ஆசை வந்தது என்று முன்னதாக நடந்த ஒரு நிகழ்ச்சியில் கூறியிருந்தார்.


இவர்தான் படம் இயக்கி அசத்தி வருகிறார் என்று நினைத்து வர, இவரின் துணை இயக்குனரான அஸ்வின் கங்கராஜு 1770 எனும் படத்தை இயக்கவுள்ளார். இப்படம் பக்கிம் சந்திர சட்டர்ஜி எழுதிய ஆனந்த மாத் என்ற நாவலை தழுவி எடுக்கப்படவுள்ளது. தற்போது 1770-ன் மோஷன் போஸ்டர் வெளியாகி இருக்கிறது.







இந்த படம் ஹிந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் பெங்காலி ஆகிய ஆறு மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகிறது. இந்தியாவின்  சுதந்திர தினம் முடிந்த நிலையில், நாட்டின் சுதந்திரத்திற்கு போராடிய பம்கிம் சந்திர சாட்டர்ஜியை படமாக்கவுள்ளனர்.


'SS1' என்டர்டெயின்மென்ட் மற்றும் PK என்டர்டெயின்மென்ட் ஆகியவற்றின் கீழ் தயாரிக்கப்படும் இந்தப்படத்தை 
ராஜமௌலியின்  ஈகா மற்றும் 'பாகுபலி' ஆகிய இரண்டு படங்களில்  பணிபுரிந்த உதவி இயக்குநர் அஸ்வின் கங்கராஜு இயக்கவுள்ளார் என்பது கூடுதல் தகவல் ஆகும். 


”இப்படத்தை இயக்கவது கடினம்தான் ஆனால்,வி.விஜயேந்திர பிரசாத்துடன் இணைந்து திரைக்கதை எழுதியதால் இப்படம் ப்ளாக் பஸ்ட்ர் சினிமாவாக அமையும் என நம்புகிறேன். ஷைலேந்திர ஜி, சுஜய் குட்டி, கிருஷ்ண குமார் மற்றும் சூரஜ் சர்மா ஆகிய தயாரிப்பாளர்களை மும்பையில் சந்தித்தேன். படத்தைப் பற்றியும் அதை எப்படி முன்னெடுத்துச் செல்ல விரும்புகிறார்கள் என்பது பற்றியும் நீண்ட விவாதம் செய்தோம்” என அஸ்வின் கூறியுள்ளார். படக்குழுவினரின் பட்டியல்  வரும் தீபாவளிக்கு வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.