”ஆதிபுருஷ்” திரைப்படம்


இந்தியில் வெளியான தன்ஹாஜி: தி அன்சங் வாரியர் படத்தை இயக்கி தேசிய விருது பெற்ற இயக்குநர் ஓம் ராவத். இவரது இயக்கத்தில் ராமாயண கதையைக் தழுவி உருவாகி வரும் திரைப்படம் ‘ஆதி புருஷ்’. பான் இந்தியா திரைப்படமாக உருவாகிவரும் இப்படத்தில், பாகுபலி புகழ் பிரபாஸ், அவருக்கு ஜோடியாக கீர்த்தி சனோன் மற்றும் ராவணன் கதாபாத்திரத்தில் சைஃப் அலி கான் ஆகியோர் நடித்துள்ளனர். 


விமர்சனங்களும், சர்ச்சையும்:


பிரமாண்ட பொருட்செலவில் உருவாகி வரும் இந்தப்படத்தின் டீசர் கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி உத்திரபிரதேச மாநிலம், அயோத்தியில் பிரமாண்டமாக வெளியிடப்பட்டது. ஆனால் டீசர் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை வரவேற்பை பெறாமல், கடுமையான விமர்சனங்களை பெற்றது. கிராபிக்ஸ் காட்சிகள் பொம்மை படம் போல் அமைந்து இருப்பதாக ரசிகர்கள் கடுமையாக விமர்சித்தனர். அதேநேரம் மற்றொரு பக்கம் கடுமையான கண்டனங்களையும் எதிர்கொண்டது. குறிப்பாக, ராமர், லட்சுமணன் மற்றும் ராவணனை தவறாக சித்தரித்ததாகவும், இந்து மத நம்பிகை மற்றும் புராணங்களை சீர்குலைத்தாகவும் சர்ச்சை கிளம்பியது.


ரிலீஸ் ஒத்திவைப்பு:


இதையடுத்து, ஐமேக்ஸ் மற்றும் 3 டி வடிவில் கடந்த ஜனவரி 12 ஆம் தேதி வெளியாக இருந்த ஆதிபுருஷ் திரைப்படத்தின்  ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டது. மேலும், பார்வையாளர்களுக்கு முழுமையான விஷூவல் அனுபவத்தை நாங்கள் அளிக்க விரும்புகிறோம். இதற்கு அதிக நேரம் தேவைப்படுவதால், ஆதிபுருஷ் திரைப்படம் ஜூன் 16 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.






கவுண்டவுன் தொடங்கியது:


இந்நிலையில் இயக்குனர் ஓம் ராவத் சமூக வலைதளத்தில் பதிவில், ”ராமரின் நற்பண்பை வெளிக்காட்டுவதில் நாங்கள் எப்போதும் மகிழ்ச்சியடைகிறோம். 150 நாட்களில் இந்தியாவின் காலத்தால் அழியாத காவியத்தை உலகம் காணும். ஆதிபுருஷ் ஜூன் 16, 2023 அன்று 3Dயில் திரையரங்குகளில் வெளியாகிறது” என குறிப்பிட்டுள்ளார். இதனால், பிரபாஸ் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு என 5 மொழிகளில் இந்த திரைப்படம் வெளியாக உள்ளது.