வெங்கட் பிரபு இயக்கத்தில் , அஜித் குமார் நடிப்பில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த திரைப்படம் ‘மங்காத்தா’. இந்த படம் வெளியாகி இன்றுடன் 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதனை ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் வாயிலாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மங்காத்தா 10 வது ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு ‘காமன் டிபி’ ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.தற்போது ட்விட்டரில் #10yearsofmankatha என்ற முன்னெடுப்பும் வைரலாகி வருகிறது. 


 














அஜித் கெரியரில் மங்காத்தா மிக முக்கிய படம். அஜித்தின் 50 வது படமாக அமைந்த மங்காத்தா அவரது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ட்ரீட்டாக அமைந்தது. படத்தில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருந்தாலும் முழுக்க முழுக்க அஜித்தே நினைவில் இருப்பார்.  ”அயம் எ ஹீரோ அண்ட் வில்லன்” என்பது போல அஜித் இந்த படத்தில் நெகட்டிவ் ஷேடில் நடித்திருப்பார். எதிர்மறை கதாபாத்திரமானாலும் அதை அஜித் ரசிகர்கள் கொண்டாடும் தொனியில் மாஸாக உருவாக்கியிருப்பார் இயக்குநர் வெங்கட் பிரபு. இந்த படத்தில் இடம்பெற்ற “money! money ! , எவ்வளவு நாள்தான் நல்லவனாவே நடிக்கிறது, " போன்ற வசனங்கள் பட்டி தொட்டியெங்கும் பிரபலம். இந்த படத்தின் வசனங்கள் எந்த அளவிற்கு பிரபலமோ அதே அளவிற்கு  படத்தின் தீம் இசையையும் ரசிகர்கள் கொண்டாடினர். இன்றக்கும் கூட அஜித் என்றாலே  மங்காத்தா தீம் இசைதான். அந்த அளவிற்கு மாஸ் ட்ரீட் கொடுத்திருப்பார் யுவன் சங்கர் ராஜா. படத்தின் பாடல்கள் அனைத்துமே  வேற லெவல் ஹிட். இப்போதும் பல மீம் பக்கங்களில் மங்காத்தா படத்தின் வசனங்களையும், அஜித்தின் புகைப்படங்களை பார்க்க முடியும். தற்போது 10 வருட மங்காத்தா பட கொண்டாட்டத்தில் இயக்குநர் வெங்கட் பிரபுவும் இணைந்துள்ளார். இது குறித்து வீடியோ ஒன்றை பகிர்ந்த அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் “ 10 வருடம் ஓடிவிட்டது!  ஆனால் இன்னும் கொண்டாட்டம் முடியவில்லை , எனது அருமை தல ரசிகர்களே ! 10 வருட மங்காத்தா கொண்டாட்டத்திற்கு தயாராகுங்கள் “ என குறிப்பிட்டுள்ளார். வெங்கட் பிரபு பகிர்ந்துள்ள வீடியோவில் , மங்காத்தா படத்தின் தீம் மியூசிக்குடன் , அஜித்தின் மாஸான டயலாக் மற்றும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.