பில்லா 2 :


அஜித் நடிப்பில் ஜூலை 13, 2012 ஆண்டு வெளியான திரைப்படம் பில்லா. இந்த படம் வெளியாகி நேற்றுடன் 10 வருடங்கள் ஆகிறது. முன்னதாக ரஜினி நடிப்பில் வெளியான பில்லா படத்தின் ரீமேக்தான் . பில்லா 2. ஏழையாக இருக்கும் ஒரு மீனவர் எப்படி உலக பணக்காரர்கள் மிரளும் கேங்ஸ்டராகிறார் என்பதுதான் படத்தின் கதை. இது அஜித்தின் 51 வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் அஜித்தின் வாழ்க்கையில் தோல்விடை சந்தித்த படங்களுள் ஒன்று . அதற்கான காரணம் என்ன என்பது குறித்து அலசலாம்.






கதைக்களம் :


அதே பழகிப்போன பில்லா கதைதான் என்றாலும் கூட  தற்போதைய ஆடியன்ஸுக்கு ஏற்ற மாதிரியான சில மாற்றங்களை செய்திருந்தார்கள் ஆனால் அதில் ஒரு டெப்த் இல்லை. குறிப்பாக திரைக்கதை மிகவும் பலவீனமாக இருந்தது. டான் சப்ஜெக்ட்டை கையில் எடுக்கும் பொழுது , அதில் மாஸுக்கு பஞ்சம் இருக்கக்கூடாது. அதிலும் அஜித் போன்ற மிகப்பெரிய நட்சத்திரத்தை வைத்து எடுக்கும் பொழுது ஃபோக்கஸாக இருந்திருக்க வேண்டும். அஜித் ஒரு சாதாரண மனிதனாக இருந்து சவால்களை எதிர்த்து போராடி இறுதியில் ஒரு டான் என்ற பட்டத்தை பெறும் கதை , இது அஜித் ரசிகர்களுக்கான படம் என்பதில் சந்தேகமே இல்லை.






கதாபாத்திரங்கள் :


அஜித்தின் கதாபாத்திரம் மாஸாக இருந்தது என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் அவருக்கு எதிரியாக வரும் கதாபாத்திரத்திலும் கவனம் செலுத்திருக்கலாம். ஒரு படத்தில் நாயகன் ஸ்டிராங்காக இருந்தால் மட்டும் போதாது. அதே போல படத்தில் நயன்தாரா க்ளாமருக்காக வந்து போவது போலத்தான் இருந்தாரே தவிர அவருக்கும் பெரிய ஸ்கோப் இருந்ததாக தெரியவில்லை.


மாஸ் ஓப்பனிங்:


படம் முதல் நாளே 100 சதவிகிதம் திரையரங்கு ஆக்கிரமிப்புகளை பெற்றது. ஆனால் 3 நாட்களுக்கு மட்டுமே அதனை பார்க்க முடிந்தது. பின்னர் கணிசமாக ஆடியன்ஸ் குறைய தொடங்கினர். இப்படம் முதல் மூன்று நாட்களில் சுமார் ரூ.4.80 கோடி வசூல் செய்து, இந்திய பாக்ஸ் ஆபிஸில் ரூ.48 கோடி வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.