நாடாளுமன்றத்தேர்தல் வேட்புமனு தாக்கல் நேற்றோடு நிறைவடைந்தது. இறுதி நாளில் இந்தியா கூட்டணியின் சார்பில் காங்கிரஸ் கட்சி திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தது. அதேபோன்று நாம் தமிழர் சுயேச்சைகள் என்று பல்வேறு தரப்பினரும் வேட்பு மனுவை தாக்கல் செய்தனர். யாரும் எதிர்பாராத வகையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்து இருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வாய்ப்பு மறுக்கப்பட்ட போதும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடுவதாக போட்டி வேட்பாளராக வேட்பு மனுவினை தாக்கல் செய்தார்.


இது காங்கிரஸ் கட்சியினரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இன்று தனது நிலைப்பாடு குறித்து பேசிய செய்தியாளர்களிடம்  பேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராமசுப்பு, எனக்கு தான் வேட்பாளர்கள் என்று பலர் சொன்னார்கள். ஆனால் கடைசியாக அறிவிக்கவில்லை அது ஒரு ஆதங்கம். ராபர்ட் புரூஸ் மீது எந்த வருத்தமும் எனக்கு இல்லை, ஆனால் என்னுடைய உழைப்பு, உரிமை எல்லாத்தையும் நீங்கள் பறித்து விட்டீர்கள். கடைசி வரை போராடினேம். அந்த வாய்ப்பை நீங்கள் வழங்கவில்லை. 


நான் இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினர் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற பதவிகளை பெற்றிருந்த போது பல்வேறு திட்டங்களை தனது தொகுதிக்காக செய்துள்ளதாக பட்டியலிட்டார் குறிப்பாக நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் போது திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதியின் பல்வேறு வளர்ச்சி பணிகளை மேற்கொண்டதாக குறிப்பிட்ட அவர் தனக்கு காங்கிரஸ் கட்சியில் போட்டியிட மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பி இருந்ததாகவும் வேட்பாளர் பட்டியல் திங்கள்கிழமை வெளியான அன்று பிற்பகல் ஒரு மணி வரை தனது பெயரை அறிவிக்கப்பட இருப்பதாக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே சி வேணுகோபால் தன்னிடம் தெரிவித்ததாகவும் செய்தியாளர் சந்திப்பில் ராமசுப்பு குறிப்பிட்டார். அப்படி இருந்த போதும் ஏன் தனது பெயர் மாற்றப்பட்டது என்று தனக்கு தெரியவில்லை.  இந்த இயக்கத்தின் உழைப்பாளி என்பது எல்லோருக்கும் தெரியும். உழைப்பாளிக்கு முக்கியதுவம் கொடுக்காமல் ஒரு வெற்றி வேட்பாளரை  விட்டு விட்டார்களே என்று ஆதங்கப்படும் மக்களுக்காக  தாக்கல் செய்தேன்.


காங்கிரஸ் தொண்டனின் ஆதங்கத்தை வெளிப்படுத்தும் நிலையில் தான் வேட்புமனு தாக்கல் செய்தேன். பாரம்பரிய காங்கிரஸ் கட்சிக்காரர் என்ற முறையில் கட்சிக்கு தன்னால் எந்த குந்தகமும் பாதிப்பும் ஏற்படாது என்பதை தெளிவுபடுத்திக் கொள்வதாகவும், தனது மனுவை இன்று வாபஸ் பெற்று விடுவேன் என்றும் அவர் குறிப்பிட்டார். சுயேட்சையாகவும் டம்மியாகவும் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று தெரிவித்த அவர் காங்கிரஸ் கட்சி நிச்சயம் வெற்றி பெறும் அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை என்றும் குறிப்பிட்டார், திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதி முன்னாள் எம்பி ராமசுப்பு தன்னை காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்காததை அடுத்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தும் விதமாக நேற்று நெல்லை பாராளுமன்ற தொகுதிக்கு வேட்பு மனுவை தாக்கல் செய்ததாகவும் பின்னர் அகில இந்திய காங்கிரஸிலிருந்தும் தமிழ்நாடு மாநில காங்கிரஸிலிருந்தும் தன்னிடம் தலைவர்கள் பேசியதை தொடர்ந்து தனது மனுவினை தற்போது வாபஸ் வாங்க போவதாகவும் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியினரிடையே நிலவும் உட்கட்சி பூசல் வெளிப்படையாக  தெரியும் விதமாக நடைபெறும் நிகழ்வுகள் பரபரப்பை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது