அதிமுக தொகுதி பங்கீடு நிறைவு
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 27 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி வருகிறது. அதிலும் எதிர்கட்சியான அதிமுக, ஆளுங்கட்சியான திமுகவை வீழ்த்தி மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் வகையில், பலமான கூட்டணியை உருவாக்கியது. அந்த வகையில் பாஜகவிற்கு 27 தொகுதிகள், பாமகவிற்கு 18 தொகுதிகள், அமமுகவிற்கு 11 தொகுதிகள், தமாகவிற்கு 5 தொகுதிகள், ஐஜேகவிற்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. அடுத்தாக எந்த கட்சிக்கு எந்த தொகுதி என்ற பட்டியலும் வெளியிடப்பட்டது. இதில் மைலாப்பூர், பெரம்பூர் ஆகிய தொகுதிகள் கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
இதனையடுத்து அதிமுக சார்பாக போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் முதல்கட்ட பட்டியில் வெளியிடப்பட்டது. இதில் அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சர்களாக இருந்த 23 பெயர்கள் பட்டியலில் இடம்பிடித்தது. இந்த நிலையில் திமுகவின் கோட்டை என கூறப்படும் சென்னையில் 13 தொகுதியில் அதிமுக களம் இறங்கவுள்ளது. அந்த வகையில் 13 தொகுதிகளின் உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது.
சென்னை அதிமுக வேட்பாளர்கள் உத்தேசபட்டியல்
- திருவெற்றியூர் - கார்த்திக் குப்பன் - முன்னாள் எம்எல்ஏ குப்பனின் மகன்
- ஆர்.கே.நகர் - ராஜேஷ்
- கொளத்தூர் - கிருஷ்ணமூர்த்தி - (OPs அணியில் இருந்து வந்தவர்)
- வில்லிவாக்கம் - திருமங்கலம் மோகன் - தற்போதைய மாவட்ட செயலாளர்.
- திரு.வி.க நகர் - ஆம்ஸ்ட்ராங் பொற்கொடி
- எழும்பூர் - அபிஷேக் ரங்கசாமி
- ராயபுரம் - ஜெயக்குமார்- முன்னாள் அமைச்சர் (அறிவிக்கப்பட்டார்)
- துறைமுகம் - பாலகங்கா - முன்னாள் எம்.பி
- சேப்பாக்கம் திருவல்லிக்கேணி- ஆதி ராஜாராம்
- வேளச்சேரி – அசோக் - முன்னாள் எம்எல்ஏ
- ஆயிரம் விளக்கு - பா.வளர்மதி - முன்னாள் அமைச்சர்
- அண்ணாநகர் - கோகுல இந்திரா - முன்னாள் அமைச்சர்
- விருகம்பாக்கம் பார்த்து - ரவி முன்னாள் எம்எல்ஏ
- தியாகராய நகர் - சத்தியா -முன்னாள் எம்எல்ஏ
