TN Election 2026 BJP Constituency: அதிமுக கூட்டணியில் சென்னை மற்றும் கோவையில் பாஜகவிற்கு ஒரே ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

பாஜகவிற்கு ஒதுக்கிய தொகுதிகள்:

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் பாஜகவிற்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. குறிப்பிடுத்தக்க வகையில் டெல்லியின் கடும் அழுத்தத்திற்கு மத்தியிலும், அந்த கட்சி வலுவாக உள்ளதாக கூறப்படும் சென்னை மற்றும் கோவை மாவட்டங்களில் தலா ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. மாநில தலைவரான நயினார் நாகேந்திரன் கடந்த முறை போட்டியிட்டு வென்ற திருநெல்வேலி தொகுதியும் பாஜகவிற்கு வழங்கப்படவில்லை. முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூரைத் தவிர, இந்து மதத்திற்கான முக்கியத்துவம் வாய்ந்த கோயில்களை கொண்ட வேறு எந்தத் தொகுதியும் கூட பாஜகவுக்கு ஒதுக்கப்படவில்லை.  கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் பாஜக வென்ற 4 தொகுதிகளில், 2 தொகுதிகளில் மட்டுமே மீண்டும் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பாஜக சார்பில் அறிவிக்கப்பட உள்ள வேட்பாளர்களின் உத்தேச விவரங்கள் வெளியாகியுள்ளன.

Continues below advertisement

27 தொகுதிகள் - பாஜகவின் வேட்பாளர்கள் யார்?

கடந்த முறை திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்டு வென்ற பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முதல்முறையாக சாத்தூர் தொகுதியில் போட்டியிடுவார் என கூறப்படுகிறது.  அவரை தொடர்ந்து அண்ணாமலை போட்டியிடுவதற்கு ஏதுவாக பல்லடம் தொகுதியை ஒதுக்க அதிமுக முன்வந்ததாம். ஆனால், கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட கோயம்புத்தூர் தொகுதிக்கு உட்பட்ட சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையத்தை அவர் தேர்வு செய்தாராம். ஆனால், இரண்டு தொகுதிகளுமே பாஜகவிற்கு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அவர் இந்த தேர்தலில் போட்டியிடாமல் போக வாய்ப்புள்ளதாகவும், நயினார் திட்டமிட்டே உள்ளடி வேலை பார்த்ததாகவும் கமலாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே, திருப்பூர் தெற்கு தொகுதியில் இந்து முன்னணி கட்சியின் தலைவர் காடேஷ்வர சுப்ரமணியத்தின் மகனான காடேஷ்வர தங்கராஜ் களமிறக்கப்பட உள்ளாராம்.

எல்.முருகன், வானதி ஸ்ரீனிவாசனுக்கான தொகுதிகள்?

அவினாசி தனி தொகுதியில் மத்திய இணை அமைச்சர் எல். முருகனையும், மொடக்குறிச்சியில் சிட்டிங் எம்.எல்.ஏவான சரஸ்வதியின் உறவினரையும் வேட்பாளராக களமிறக்க பரிசீலிக்கப்பட்டு வருகிறதாம். கடந்தமுறை கோவை தெற்கில் வென்ற வானதி ஸ்ரீனிவாசன் இந்த முறை கோவை வடக்கில் களமிறங்க உள்ளாராம். சென்னையில் கடந்தமுறை இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட பாஜகவிற்கு இந்த முறை மயிலாப்பூர் மட்டுமே ஒற்றை தொகுதியாக ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு தமிழிசை சவுந்தரராஜன் களமிறங்குவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் கடுமையாக களப்பணியாற்றி வந்த வினோஜ் பி செல்வம் மற்றும் எஸ்.ஜி. சூர்யா ஆகியோருக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

தெற்கை குறிவைத்த பாஜக:

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில், விளவங்கோடு, குளச்சல் மற்றும் பத்மநாதபுரம் ஆகிய தொகுதிகளை பாஜக கைப்பற்றியுள்ளது. இதில் குளச்சல் மற்றும் விளவங்கோடு தொகுதிகளில் நேரடியாக காங்கிரஸை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது. அதன்படி, விளவங்கோட்டில் விஜயதாரணிக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என தெரிகிறது. வாசுதேவநல்லூரில் ஆனந்தன் அய்யாசாமி வேட்பாளராவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளதாம். நாகர்கோவிலில் சிட்டிங் எம்.எல்.ஏ எம்.ஆர். காந்தி அல்லது மீனாதேவ், தஞ்சாவூரில் கருப்பு முருகானந்தம் மற்றும் ராமநாதபுரத்தில் பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோர் வேட்பாளர்களாக பரிசீலிக்கப்பட்டு வருகின்றனராம்.

பாஜக உத்தேச வாக்காளர் பட்டியல்..

தொகுதி எண்தொகுதிஉத்தேச வேட்பாளர்
1மயிலாப்பூர்தமிழிசை சவுந்தரராஜன்
2தளிநரேந்திரன்/அமர்பிரசாத் ரெட்டி
3மொடக்குறிச்சிசிட்டிங் எம்.எல்.ஏ., சரஸ்வதியின் மருமகள் காயத்ரி
4உதகமண்டலம் -
5அவிநாசிஎல். முருகன்
6திருப்பூர் தெற்குகாடேஷ்வர தங்கராஜ்
7கோவை வடக்குவானதி ஸ்ரீனிவாசன்
8கந்தர்வகோட்டைபுரட்சி கவிதாசன்
9புதுக்கோட்டை-
10திருப்பத்தூர்ராமேஸ்வரன்
11மதுரை தெற்குராம்ஸ்ரீனிவாசன்
12சாத்தூர்நயினார் நாகேந்திரன்
13திருச்செந்தூர்கே.ஆர்.எம். ராதாகிருஷ்ணன்
14வாசுதேவநல்லூர்ஆனந்தன் அய்யாசாமி
15ராதாபுரம்-
16நாகர்கோவில்எம்.ஆர். காந்தி/மீனாதேவ்
17விளவங்கோடுவிஜயதாரணி
18ஆவடிஅஸ்வின்/பாஸ்கர்
19திருவண்ணாமலைஅஸ்வத்தாமன்
20தஞ்சாவூர்கருப்பு முருகானந்தம்
21திருவாரூர்கோவி சந்துரு/சந்திரசேகர்
22அறந்தாங்கிலண்டன் ராமசாமி/கவிதா ஸ்ரீகாந்த்
23மானாமதுரைபொன் பாலகணபதி
24ராமநாதபுரம்பொன். ராதாகிருஷ்ணன்
25குளச்சல்தர்மராஜ்
26பதம்நாபபுரம்பவானி எட்வின் ஜோஸ்/உன்னி கிருஷ்ணன்
27ராசிபுரம்-

இதுபோக மற்ற தொகுதிகளில் ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறதாம். ஓரிரு நாட்களில் அதிகாரப்பூர்வ இறுதிவேட்பாளர் பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.