இந்தியா கூட்டணி ஆட்சியமைக்காது என நினைக்க வேண்டாம் என திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்களவை தேர்தல் முடிவு:
கடந்த 4ஆம் தேதி, மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியானது. அதில், பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றாலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு கிடைத்துள்ளது. இதையடுத்து, மத்தியில் மீண்டும் ஆட்சியைமப்பதற்காக மோடி, டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முன்னிலையில் பிரதமராக மோடி பதவியேற்கவுள்ளார்.
இந்நிலையில் பேசிய மம்தா பானர்ஜி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவிக்கையில், “நான் அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளேன் என தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், எம்பி சுதீப் பந்தோபாத்யாய் மக்களவைத் தலைவராகவும், டாக்டர் ககோலி கோஷ் தஸ்திதர் மக்களவைத் துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்தார்.
”எனது வாழ்த்துகள் நாட்டுக்காக”:
முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவிக்கையில், அரசியலமைப்பு சட்டத்திற்கு புறம்பான, சட்ட விரோதமான கட்சியை ஆட்சி அமைக்க நான் விரும்ப முடியாது. எனது வாழ்த்துகள் நாட்டுக்காக இருக்கும். அனைத்து எம்.பி.க்களுக்கும் தங்கள் கட்சியை வலுப்படுத்த கூறுவேன். உங்கள் கட்சியை உடைக்க மாட்டோம் ஆனால் உங்கள் கட்சிக்குள் பிளவுகள் ஏற்படும், உங்கள் கட்சியில் உள்ளவர்கள் மகிழ்ச்சியாக இல்லை.
மேலும் இந்தியா கூட்டணி ஆட்சியமைக்காது எனவும் நினைக்க வேண்டாம், இப்போதும், தேர்தல் முடிவுகள் பற்றி ஆய்வு செய்து வருகிறோம் எனவும் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
பிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாட்டேன்:
பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வீர்களா என்ற கேள்விக்கு, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, "எனக்கு (அழைப்பு) வரவில்லை, போக மாட்டேன்" என்று கூறினார்.