திருநெல்வேலி அம்பை சட்டமன்ற தொகுதி வாக்குப்பெட்டிகள் உள்ள கட்டிட வாசலின் பூட்டிற்கான சாவி தொலைந்ததால் பூட்டை உடைத்து அதிகாரிகள் உள்ளே சென்றனர். இதனால், அப்பகுதியில் சில மணிநேரம் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. 


என்ன நடந்தது..? 


நெல்லை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட அம்பை சட்டமன்ற தொகுதி வாக்குப்பெட்டிகள் உள்ள பகுதிக்கு செல்லும் முகவர்கள் செல்லும் வழியில் உள்ள வாசலின் பூட்டிற்கான சாவி தொலைந்ததால் பூட்டு உடைக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, துரிதமாக செயல்பட்ட அதிகாரிகள் பூட்டை உடைத்து உள்ளே சென்று வாக்கு எண்ணும் பணியை தொடங்கினர். 


இதையடுத்து, அரசியல் கட்சி பிரமுகர்கள் தேர்தல் ஆணையத்தை கண்டித்து கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.


பரபரப்புக்கு பிறகு, வாக்கு எண்ணிக்கை பணி நடைபெற்று வரும் நிலையில், திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்கான தபால் வாக்குகள் எண்ணிக்கையில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் முன்னிலை வகிக்கிறார்.