MGnrega Scheme Salary: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், அதாவது 100 நாள் வேலை திட்டத்திற்கான ஊதியத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.

100 நாள் வேலை திட்ட ஊதியம் உயர்வு:

அதன்படி, தமிழ்நாட்டில் தற்போது நாள் ஒன்றிற்கு 294 ரூபாய் ஊதியமாக வழங்கப்பட்டு வரும் நிலையில், இனி நாள் ஒன்றிற்கு 319 ரூபாய் ஊதியமாக வழங்கப்படும் என மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மாநில வாரியாக இந்த ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. புதுச்சேரியிலும் இனி நாள் ஒன்றிற்கு 319 ரூபாய் ஊதியமாக வழங்கப்பட உள்ளது. நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான, முதற்கட்ட வாக்குப்பதிவு வரும் 19ம் தேதி நடைபெற உள்ள நிலையில் 100 நாள் வேலை திட்டத்திற்கான ஊதியம் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது.

மாநில வாரிய ஊதிய உயர்வு:

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. அதன்படி, மத்திய, மாநில அரசுகள் வாக்காளர்களை கவரும் விதமாக எந்தவொரு நலத்திட்டங்களையும் அறிவிக்கக் கூடாது. அப்படி அறிவித்தார் அது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி குற்றமாகும். அப்படி செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் கடுமையாக எச்சரித்துள்ளது. இந்நிலையில் தான், ஊதிய உயர்வானது கடந்த பிப்ரவரி 26ம் தேதி முதலே அமலுக்கு வந்துள்ளதாகா, மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின்படி, மாநில வாரியாக தற்போது பின்வரும் ஊதிய விவரங்கள் தான் பின்பற்றப்படுகிறது. மத்திய அரசின் இந்த ஊதியத்தை உயர்த்தும் நடவடிக்கை பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

வரிச எண்மாநில & யூனியன் பிரதேசங்கள்புதிய ஊதிய விவரம்
1ஆந்திர பிரதேசம்ரூ.300
2அருணாச்சல பிரதேசம்ரூ.234
3அசாம்ரூ.249
4பீகார்ரூ. 245
5சத்தீஸ்கர்ரூ.243
6கோவாரூ.356
7குஜராத்ரூ.280
8ஹரியானாரூ.374
9இமாச்சல பிரதேசம்ரூ.236 - ரூ.295
10ஜம்மு & காஷ்மீர்ரூ.259
11லடாக்ரூ.259
12ஜார்கண்ட்ரூ.245
13கர்நாடகாரூ.349
14கேரளாரூ.346
15மத்திய பிரதேசம்ரூ.243
16மகாராஷ்டிராரூ.297
17மணிப்பூர்ரூ.272
18மேகாலயாரூ.254
19மிசோரம்ரூ.266
20நாகாலாந்துரூ.234
21ஒடிசாரூ.254
22பஞ்சாப்ரூ.322
23ராஜஸ்தான்ரூ.266
24சிக்கிம்ரூ.249
25தமிழ்நாடுரூ.319
26தெலங்கானாரூ.300
27திரிபுராரூ.242
28உத்தரபிரதேசம்ரூ.237
29உத்தராகண்ட்ரூ.237
30மேற்குவங்கம்ரூ.250
31அந்தமான் & நிகோபர்ரூ.329 - ரூ.347
32டையூ & டாமன்ரூ.324
33லட்சத்தீவுரூ.315
34புதுச்சேரிரூ.319