நாடு முழுவதும் உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே தொடங்கவுள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்படும் உபி தேர்தல் நாளை தொடங்கி மார்ச் 7-ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை மார்ச் 10-ஆம் தேதி நடைபெறவுள்ளது. தற்போது ஆளும் அரசான பாஜகவுக்கும், சமாஜ்வாதி கட்சிக்கும் இடையே பலத்த போட்டி உபியில் நிலவுகிறது.
முதல்கட்ட தேர்தல்..
உபியின் முதல் கட்ட தேர்தல், மாநிலத்தின் மேற்கு பகுதியில் உள்ள 11 மாவட்டங்களில் உள்ள 58 தொகுதிகளில் நாளை நடைபெற உள்ளது. தேர்தல் ஆணையத்தில் தேர்தல் விதிமுறைப்படி வாக்குப்பதிவுக்கு 48 மணி நேரத்துக்கு முன் நேற்று மாலை பிரச்சாரம் ஓய்ந்தது.
நாளை காலை 7 மணிக்கு குறிப்பிடப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு தொடங்கவுள்ளது. கொரோனா காலம் என்பதால் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கடைபிடிக்கப்பட்டே ஓட்டுப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஓட்டுப்பதிவு மாலை 6 மணிக்கு முடிவடையும். தற்போது அமைச்சர்களான ஸ்ரீகாந்த் சர்மா, சுரேஷ் ராணா, சந்தீப் சிங், கபில் தேவ் அகர்வால், சவுத்திரி லக்ஸ்மி உள்ளிட்டவர்கள் நாளை நடக்கவுள்ள தொகுதிகளில் போட்டியிடுகின்றனர்.
SS Balaji Interview | “அண்ணாமலை செய்வது மலிவு அரசியல்”- கொந்தளித்த S.S. பாலாஜி
கொரோனா கட்டுப்பாடுகள்:
தேர்தல் திருவிழாதான் என்றாலும் கொரோனா பரவல் காரணமாக கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது. தேர்தல் நடைபெற உள்ள 5 மாநிலங்களில் கொரோனா காரணமாக ஜனவரி 22ஆம் தேதி வரை தடை இருந்தது. அந்தத்தடை ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. தொடக்கத்தில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிக்க 5 பேருக்கு அனுமதி இருந்த நிலையில் பின்னர் 10 பேருக்கு அனுமதி கொடுக்கப்பட்டது. தேர்தல் பொதுக்கூட்டங்களில் 500 பேர் வரை பங்கேற்க அனுமதி என்றும் தலைமைத் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. பிரச்சாரங்களை வீடியோ வேன்கள் மூலம் நடத்திக்கொள்ளவும் தேர்தல் ஆணையம் அனுமதி கொடுத்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்