நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்று முடிந்தது. மதுரையில் ஒரு மாநகராட்சி, மேலூர், உசிலம்பட்டி, திருமங்கலம் ஆகிய 3 நகராட்சிகள், அ.வல்லாளபட்டி, அலங்காநல்லூர், டி.கல்லுப்பட்டி, பாலமேடு உள்ளிட்ட 9 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. மதுரை மாநகராட்சி மொத்தம் 100 வார்டுகள் தி.மு.க., 67 வார்டுகள் வெற்றி பெற்றுள்ளது. தி.மு.க கூட்டணிகளான காங்கிரஸ் 5 இடத்திலும், வி.சி.க ஒரு இடத்திலும், சி.பி.எம் 4 இடத்திலும், ம.தி.மு.க 3 இடத்திலும் என தி.மு.க கூட்டணி மொத்தம் 80 இடத்தில் வெற்றிபெற்றுள்ளது. அதே போல் அ.தி.மு.க 15 இடத்திலும், பா.ஜ.க ஒரு இடத்திலும், சுயேட்சை 4 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது.
நகர்புற உள்ளாட்சி தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி ஓ.பி.எஸ் தலைமையிலான அ.தி.மு.க ஒரு மாநகராட்சியை கூட கைப்பற்றாமல் கோவை, சேலம், ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சில இடங்களில் அ.தி.மு.க வேட்பாளர்கள் டெபாசிட் இழந்துள்ளனர். இந்த தேர்தல் முடிவு அ.தி.மு.கவினரிடையே கவலையை ஏற்படுத்திய நிலையில் கடந்த இரு நாட்களாக அ.தி.மு.கவிற்கு தலைமை மாற்றம் தேவை எனவும், சசிகலா அ.தி.மு.கவின் தலைமை ஏற்க வேண்டும் என சென்னை , தூத்துக்குடி மாவட்டங்களில் அதிமுக தொண்டர்கள் சிலர் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்.
மேலும் சமூகவலைதளங்களிலும் சசிகலா தலைமை அ.தி.மு.கவிற்கு வேண்டும் என்று பல்வேறு அதிமுகவினரும் தங்களது கருத்துகளை தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில் மதுரை மாநகரிலும் சசிகலா அ.தி.மு.கவிற்கு தலைமை ஏற்க வேண்டும் என கூறி அ.தி.மு.கவினரால் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. முனீஸ் என்ற அ.தி.மு.க தொண்டர் ஒருவர் மதுரை மாநகரில் பல்வேறு இடங்களில் தோற்றது போதும் எம்.ஜி.ஆர்,ஜெயலலிதாவால் கட்டிகாக்கப்பட்ட அ.தி.மு.கவை தோல்வியில் இருந்து மீட்க தலைமையேற்க வாருங்கள் தாயே என்ற வாசகங்களுடன் மாநகர் முழுவதிலும் ஒட்டப்பட்ட சுவொரட்டிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயலலிதாவின் பிறந்தநாளில் ஜெயலலிதாவின் சிலைக்கு மாலை அணிவிக்க செல்லும் முன்னாள் அமைச்சர், எம்.எல்.ஏ, நிர்வாகிகள் என அனைவரும் காணும் வகையில் கே.கே.நகர், அவுட்போஸ்ட், கோரிப்பாளையம் பகுதியிலும் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. தொடர் தோல்வியை சந்திக்கும் அ.தி.மு.க மீண்டும் சசிகலாவின் தலைமையை நோக்கி செல்லும் வகையில் சுவரொட்டிகள் மூலமாக அழைப்புவிடுக்க தொடங்கி உ ள்ளதாக பார்க்கப்படுகிறது.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - local body election 2022 : டி.கல்லுப்பட்டியில் ஏற்பட்ட குழப்பம் ; ஆட்சியர் அலுவலகத்தை நாடிய சுயேச்சை !