ரஷ்யா உக்ரைன் போன் தொடங்கியுள்ள நிலையில் சர்வதேச  சந்தையில் கச்சா எண்ணெயின் விலை 100 டாலர் உயர்ந்துள்ளது.


ரஷ்யா உக்ரைன் மீது போர் தாக்குதலைத் தொடங்கியுள்ள நிலையில் அதன் தாக்கம் கச்சா எண்ணெய் விலையில் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலின் விலை 100 டாலராக உயர்ந்தது.  கச்சா எண்ணெயின் விலை 2014 ஆம் ஆண்டிற்கு பின்,  8 ஆண்டுகளுக்கு பிறகு 100 டாலராக உயர்வு.   டீசல் மற்றும் பெட்ரோலியப் பொருள்களுக்கு மூலப்பொருளாக இருக்கும் கச்சா எண்ணெயின் விலை அதிகரித்து வருவது, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விலையை இன்னும் அதிகரிக்கும்.   எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் ரஷ்யாவின் பங்களிப்பு அதிகம்.  மேலும், 2020-ம் ஆண்டில், கொரோனா தொற்று பரவல் காரணமாக உலகமே முடங்கி இருந்த போது அனைத்துவிதமான போக்குவரத்து முடங்கியது. பெட்ரோல், டீசல் மீதான தேவை குறைந்தது.  கச்சா எண்ணெய்யின் விலை பெரும் சரிவை சந்தித்தது.


இந்தியாவின் பெட்ரோல் டீசல் தேவையை நிவர்த்தி செய்யும் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் 85% கச்சா எண்ணெய் இறக்குமதியையே சார்ந்துள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்வால் நாட்டின்  பணவீக்கம், அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு ஆகிவற்றிற்கு வழிவகுக்கும். மேலும், இதனால் உற்பத்தி துறை கடுமையாக பாதிக்கப்படும் என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.  பெட்ரோல், டீசல் விலை உயர்வால் போக்குவரத்து கட்டணம் உயரும்.  மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள் விலை கடுமையாக  உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை குறைத்த பிறகு, பெட்ரோல் டீசல் விலையில் பெரிதளவில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. நாட்டில் பல மாநிலங்களில் தேர்தல் முடிந்துள்ள நிலையில், பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்படலாம். 


இந்நிலையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ள நிலையில், பெயிண்ட், டயர்கள், பிளாஸ்டிக், ஆகிய பொறியியல் சார்ந்த தயாரிப்பு துறையில் பெரும் விலை உயர்வை ஏற்படுத்தும்.  விமானம், ரயில், பேருந்து போன்றவைகளின் போக்குவரத்து கட்டணம் உயரும்.  இதனால் சமையல் கேஸ் விலை, உலோகங்களின் விலை அதிகரிக்கும் நிலை உள்ளதாகவும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். கச்சா எண்ணெய் விலை உயர்வு  நாட்டின் விலைவாசி மற்றும் உணவு பணவீக்கத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படும் என்றும் கூறுகின்றனர்.


ரஷ்யா - உக்ரைன் போர் பதற்றம் குறைந்தால் மட்டுமே கச்சா எண்ணெய் விலை குறைய வாய்ப்பிருக்கிறது.


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண