நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு பதிவு காலை 7 மணி முதல்  தொடங்கியது. அதன் படி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விழுப்புரம், திண்டிவனம், கோட்டகுப்பம் ஆகிய மூன்று நகராட்சிகள் உட்பட, மரக்காணம், விக்கிரவாண்டி, வளவனூர், செஞ்சி உள்ளிட்ட 7 பேரூராட்சிகள் என 10 இடங்களில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தமுள்ள 210 காலி இடங்களில், அரகண்டநல்லூர் மற்றும் விக்கிரவாண்டி பேரூராட்சியில் இரண்டு பேர் போட்டியின்றி வெற்றி பெற்றனர். இதனால், 208 பதவிகளுக்கு தேர்தல் நாளை நடைபெறுகிறது. இத்தேர்தலில் 935 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதற்காக 346 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 64 வாக்கு சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது.




விழுப்புரம் மாவட்டத்தைப் பொறுத்த வரை, ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 22 ஆண் வாக்காளர்கள் மற்றும் ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 109 பெண் வாக்காளர்கள் மற்றும் 55 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 2 லட்சத்து 93 ஆயிரத்து 186 பேர் வாக்களிக்க உள்ளனர். நகராட்சியில் உள்ள பகுதிகளை மண்டலங்களாகப் பிரித்து, ஒரு மண்டலத்திற்கு ஒரு மண்டல தேர்தல் அலுவலர், ஒரு உதவி மண்டல தேர்தல் அலுவலர், காவல் உதவி ஆய்வாளர் மற்றும் துப்பாக்கி ஏந்திய காவலர் நியமிக்கப்பட்டுள்ளனர்.


திண்டிவனம் நகராட்சி: 33 வார்டுகளில், 238 வேட்பு தாக்கல் செய்தனர் . அதில் 20 வேட்பு மனுக்கள் நிராகரிக்கபட்டது. 52 வேட்பு மனுக்கள் திரும்ப பெறப்பட்டுள்ளது. மொத்தமாக 166 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.


கோட்டக்குப்பம் நகராட்சி : கோட்டக்குப்பம் நகராட்சியில்,27  வார்டுகளில், 161 வேட்பு தாக்கல் செய்தனர் அதில்  வேட்பு மனுக்கள் நிராகரிப்பு இல்லை. 16 வேட்பு மனுக்கள் திரும்ப பெறப்பட்டுள்ளது. மொத்தமாக 145 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.


வளவனூர்  பேரூராட்சி : வளவனூர்   பேரூராட்சியில்,15  வார்டுகளில், 55  வேட்பு தாக்கல் செய்தனர், அதில் 4 வேட்பு மனுக்கள் நிராகரிக்கபட்டது. 8 வேட்பு மனுக்கள் திரும்ப பெறப்பட்டுள்ளது. மொத்தமாக 43 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.



விக்கிரவாண்டி பேரூராட்சி : விக்கிரவாண்டி பேரூராட்சியில்,15  வார்டுகளில், 70  வேட்பு தாக்கல் செய்தனர், அதில் ஒருவர்  வேட்பு மனு நிராகரிக்கபட்டது. 8 வேட்பு மனுக்கள் திரும்ப பெறப்பட்டுள்ளது. மொத்தமாக 60 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.


செஞ்சி பேரூராட்சி : செஞ்சி பேரூராட்சியில்,18  வார்டுகளில், 136  வேட்பு தாக்கல் செய்தனர், அதில் அதில் 14 வேட்பு மனுக்கள் நிராகரிக்கபட்டது. 45 வேட்பு மனுக்கள் திரும்ப பெறப்பட்டுள்ளது. மொத்தமாக 77 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.


மரக்காணம் பேரூராட்சி : மரக்காணம் பேரூராட்சியில்,18  வார்டுகளில், 137  வேட்பு தாக்கல் செய்தனர், அதில் இருவர்  வேட்பு மனு நிராகரிக்கபட்டது. 34 வேட்பு மனுக்கள் திரும்ப பெறப்பட்டுள்ளது. மொத்தமாக 101 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.


திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சி : திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சியில்,15  வார்டுகளில், 81  வேட்பு தாக்கல் செய்தனர், அதில் ஒருவர்  வேட்பு மனு நிராகரிக்கபட்டது. 25 வேட்பு மனுக்கள் திரும்ப பெறப்பட்டுள்ளது. மொத்தமாக 55 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.


அரகண்டநல்லூர் பேரூராட்சி : அரகண்டநல்லூர் பேரூராட்சியில்,12  வார்டுகளில், 49  வேட்பு தாக்கல் செய்தனர், அதில் ஒருவர்  வேட்பு மனு நிராகரிக்கபட்டது. 13 வேட்பு மனுக்கள் திரும்ப பெறப்பட்டுள்ளது. மொத்தமாக 34 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.


அனந்தபுரம் பேரூராட்சி : அனந்தபுரம் பேரூராட்சியில்,15  வார்டுகளில், 66  வேட்பு தாக்கல் செய்தனர், அதில்  வேட்பு மனுக்கள் நிராகரிப்பு இல்லை. 16 வேட்பு மனுக்கள் திரும்ப பெறப்பட்டுள்ளது. மொத்தமாக 50 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.