பிரபல  எழுத்தாளரும், பத்திரிகையாளருமானவர் சந்திரா தங்கராஜ். இவரது இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'கள்ளன்'.  இதில் இயக்குனர் கரு.பழனியப்பன், நமோ. நாராயணன், தினேஷ் சுப்பராயன், சவுந்தர்ராஜா, நிகிதா,மாயா உட்பட பல்வேறு நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.




இந்த படம் கிரைம் திரில்லராக உருவாகியுள்ளது. இந்தப் படத்தை விரைவில் திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டிருந்தது. இந்த நிலையில், இந்த படத்தின் தலைப்பானது ஒரு குறிப்பிட்ட சமூகத்தை குறிப்பிடுவது போல உள்ளதாகவும், இதனால் படத்தின் தலைப்பை மாற்ற வேண்டும் என்றும், படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும் சிலர் பல்வேறு போராட்டங்களை நடத்தியதுடன், சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பல்வேறு தரப்பினரும் வழக்குத் தொடர்ந்திருந்தனர். இந்த வழக்குகள் ஏற்கனவே நிலுவையில் இருந்து வரும் சூழலில், பெண் ஒருவர் உயர்நீதிமன்றத்தில் புதிதாக ஒரு வழக்கு தொடர்ந்திருக்கிறார். அதில், 'கள்ளன்' படத்திற்கு சென்ஸார் சான்றிழத் அளிக்கக்கூடாது என்று குறிப்பிட்டிருக்கிறார்.




இதற்கிடையில் 'கள்ளன்' படத்தைப் பார்த்த சென்ஸார் குழுவினர் படத்தின் டைட்டிலுக்கும் கதைக்கும் இருக்கும் தொடர்பை வைத்து U/A சான்றிதழ் கொடுக்க பரிந்துரை செய்திருக்கிறது. இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் அந்த பெண் தொடர்ந்த வழக்கில் எந்த முகாந்திரமும் இல்லை என்று நீதிபதிகள் தீர்ப்பு வழங்கியதுடன் வழக்கையும் தள்ளுபடி செய்து வைத்து உத்தரவு பிறப்பித்தனர். இந்த படத்தின் தயாரிப்பாளர் மதியழகன் படத்தை திரையரங்கிலோ அல்லது ஓடிடி தளத்திலோ வெளியிடுவதற்கு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண