விழுப்புரம் : தமிழகச் சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) மற்றும் வாக்காளர் உறுதி செய்யும் கருவிகள் (VVPAT) முதற்கட்ட கணினி குலுக்கல் முறையில் (First Level Randomization) இன்று ஒதுக்கீடு செய்யப்பட்டன.

Continues below advertisement

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 2026 தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலில் பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர்கள் அளித்த வாக்கினை உறுதி செய்யும் கருவிகள் (VVPAT) ஆகியவை முதற்கட்ட கணினி மூலம் குலுக்கல் முறையில் (First Level Randomization) ஒதுக்கீடு செய்யும் பணிகள் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற்றது.

மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவிக்கையில்,

Continues below advertisement

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர மேலாண்மை (Election Management System) அமைப்பு மூலமாக, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர்கள் தாம் அளித்த வாக்கினை சரிபார்க்கும் கருவிகளை (VVPATI ஆகியவை முதற்கட்ட கணினி மூலம் குலுக்கல் முறையில் (First Level Randomization) மாவட்டத்தில் உள்ள 07 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒதுக்கீடு செய்யும் பணி (First Level Randomization) இன்றைய தினம் நடைபெற்றது.

அதன்படி, தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் தாம் அளித்த வாக்கினை சரிபார்க்கும் கருவிகள் ஆகியவை

70 செஞ்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 320 வாக்குச்வாவடி மையங்களுக்கு 320 வாக்குப்பதிவு கருவிகளும் (Balloot Unit), 320 கட்டுப்பாட்டு கருவிகளும் (Control Unit), 320 வாக்குப்பதிவினை உறுதி செய்யும் கருவிகள் (VVPAT),

71 மயிலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 277 வாக்குச்சாவடி மையங்களுக்கு 277 வாக்குப்பதிவு கருவிகளும் (Balloot Unit), 277 கட்டுப்பாட்டு கருவிகளும் (Control Unit), 277 வாக்குப்பதிவினை உறுதி செய்யும் கருவிகள் (VVPAT),

72 - திண்டிவனம் (தனி) சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 293 வாக்குச்சாவடி மையங்களுக்கு 293 வாக்குப்பதிவு கருவிகளும் (Balloot Unit), 293 கட்டுப்பாட்டு கருவிகளும் (Control Unit), 293 வாக்குப்பதிவினை உறுதி செய்யும் கருவிகள் (VVPAT),

73 - வானூர் (தனி) சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 299 வாக்குச்சாவடி மையங்களுக்கு 299 வாக்குப்பதிவு கருவிகளும் (Balloot Unit), 299 கட்டுப்பாட்டு கருவிகளும் (Control Unit), 299 வாக்குப்பதிவினை உறுதி செய்யும் கருவிகள் (VVPAT),

74 விழுப்புரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 336 வாக்குச்சாவடி மையங்களுக்கு 336 வாக்குப்பதிவு கருவிகளும் (Balloot Unit). 336 கட்டுப்பாட்டு கருவிகளும் (Control Unit), 336 வாக்குப்பதிவினை உறுதி செய்யும் கருவிகள் (VVPAT),

75 - விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 310 வாக்குச்சாவடி மையங்களுக்கு 310 வாக்குப்பதிவு கருவிகளும் (Balloot Unit), 310 கட்டுப்பாட்டு கருவிகளும் (Control Unit), 310 வாக்குப்பதிவினை உறுதி செய்யும் கருவிகள் (VVPAT) மற்றும்

76 -திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 330 வாக்குச்சாவடி மையங்களுக்கு 330 வாக்குப்பதிவு கருவிகளும் (Balloot Unit), 330 கட்டுப்பாட்டு கருவிகளும் (Control Unit), 330 வாக்குப்பதிவினை உறுதி செய்யும் கருவிகள் (VVPAT) என மொத்தம் 07 சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட 2165 வாக்குச்சாவடி மையங்களுக்கு 2165 வாக்குப்பதிவு கருவிகளும் (Balloot Unit), 2165 கட்டுப்பாட்டு கருவிகளும் (Control Unit) மற்றும் 2165 வாக்குப்பதிவினை உறுதி செய்யும் கருவிகளும் (VWPAT) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், 07 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 20 சதவீதம் வாக்குப்பதிவு கருவிகளும் (Balloot Unit), கட்டுப்பாட்டு கருவிகளும் (Control Unit) மற்றும் 30 சதவீதம் வாக்குப்பதிவினை உறுதி செய்யும் கருவிகளும் (VVPAT) முதற்கட்ட கணினி மூலம் குலுக்கல் முறையில் (First Level Randomization) கூடுதலாக இருப்பு வைப்பதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 07 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 432 வாக்குப்பதிவு கருவிகளும் (Balloot Unit), 432 கட்டுப்பாட்டு கருவிகளும் (Control Unit) மற்றும் 647 வாக்குப்பதிவினை உறுதி செய்யும் கருவிகளும் (VVPAT) கூடுதலாக இருப்பு வைப்பதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் தாம் அளித்த வாக்கினை உறுதி செய்யும் கருவிகள், தேர்தலில் பயன்படுத்துவதற்காக சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு / உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு வழங்கப்படும். இந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் தாம் அளித்த வாக்கினை சரிபார்க்கும் கருவிகள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் அந்தந்த சட்டமன்ற தொகுதிகளுக்கான பாதுகாப்பு அறைகளில் இருப்பில் வைக்கப்படும். போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் இறுதி செய்யப்பட்ட பின்னர் முதல்நிலை குலுக்கல் முறையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் தாம் அளித்த வாக்கினை உறுதி செய்யும் கருவிகளின் பட்டியல் போட்டியிடும் அனைத்துப் வேட்பாளர்களுக்கும் வழங்கப்படும் என மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

அதனைதொடர்ந்து, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 07 சட்டமன்ற தொகுதிகளில்

அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளுக்கு (Strong Room) மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்புவதற்காக மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர்  ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் விழுப்புரம் மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர குடோன் திறக்கப்பட்டது.